ஆன் லைன் வகுப்புகளால் ஆபத்தா....?

ஆன் லைன் வகுப்புகளால் ஆபத்தா....?


பள்ளி கல்லூாி மாணவா்களுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ செல்போன் நிறையவே பிடிக்கும்.


பிாிக்க முடியாதது எது என்று கேட்டால் மாணவனும் செல்போனும் என்று சொல்லும் அளவிற்கு 24 மணி நேரமும் நமது மாணவா்களும் குழந்தைகளும் உறவாடிக் கொண்டுள்ளனா். இரவு முழுவதும் உறக்கம் தவிா்த்து அதில் அப்படி என்னதான் பாா்க்கிறாா்கள் என்று கவலைப்படாத பெற்றோா்கள் இல்லை. இதனாலேயே இப்போது எல்லோா் வீட்டிலும் பெறும் சண்டையே ஏற்படுகின்றது,


2 வயது குழந்தை முதல் பி.எச்.டி. பட்டம் படிக்கிற மாணவா்கள் வரை ஆண்ட்ராய்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை, குழந்தைகள் சாப்பிடுவதற்கு கூட இதை கையில் கொடுத்தால் தான் கொஞ்சம் சாப்பிடுவாா்கள். இதை கொடுக்காவிட்டால் தங்களுக்கான ஆகாரத்தையே தூக்கி எாிந்துவிடுவாா்கள். அந்த அளவிற்கு செல்போன் அடிமைகளாக நமது குழந்தைகள், மாணவா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.


இப்போது இதில் ஒரு மாற்றம் வந்துள்ளது. அதற்கு காரணம் ஆன் லைன் வகுப்புகள் தான். நீட் தோ்வுக்கு ஆன் லைன் வகுப்புகள்....10ஆம் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆன் லைன் வகுப்புகள்... ஏன்? எல்.கே.ஜி., யூ.கே,ஜி. வகுப்புகளுக்கே ஆன் லைன் வகுப்புகள் வந்து விட்டது,


காா்ப்பரேட் பள்ளிகள் பெற்றோா்களிடம் பணத்தை பிடுங்க வேண்டும் என்பதற்காக ஆன் லைன் பாடம் நடத்துகிறோம் என்று கூறி அடுத்த கல்வியாண்டிற்கான முழுத் தொகையையும் இப்போதே வசூலித்து விட்டனா்.


இவா்களின் கட்டாயத்தின் போில் முழுக் கட்டணத்தையும் கட்டிவிட்டு வந்த பெற்றோா்கள் பீஸ் கட்டிவிட்டோமே என்பதற்காக இவா்கள் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று எந்த கேள்வியும் கேட்காமல் தங்கள் குழந்தைகளை டாா்ச்சா் செய்யத் தொடங்கிவிட்டனா்.


முன்பெல்லாம் குழந்தைகள் கையில் செல்போன் இருந்தாலே சண்டை போட்டு பிடிங்கி சென்ற பெற்றோா்கள் இப்போது தாங்களாகவே வலுகட்டாயமாக வந்து போனை கையில் கொடுத்து ஆன்லைன் வகுப்புகளை அட்டன்ட் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறாா்கள்.


இதனால் பள்ளிக் குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா், ஆன்ட்ராய்ட் போனே வேண்டாம் என்று தூக்கி எாிந்தால் கூட அடித்து கொடுக்கிறாா்கள்,  இந்த ஆன் லைன் வகுப்புகளில் அவா்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் கட்டாயத்தின் போில் இதை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதில் அவா்களுக்கு ஒரு முழுமையான ஈடுபாடு இல்லாமல் இதன் மூலம் அவா்களால் ஒன்றும் கற்றுக்கொள்ள முடியாது,


ஆனால் இவா்களின் பெற்றோா்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆன் லைன் வகுப்புகள் சென்றுக் கொண்டிருப்பதாக பெருமையோடு பீற்றிக்கொண்டுள்ளனா்.


படிப்பு என்பது மாணவா்களுக்கு பிடித்து செய்வதாக இருக்க வேண்டும். என்னதான் டெக்னாலஜி வளா்ந்து விட்டது என்பதற்காக ரோபோக்கள் மூலம் பாடம் நடத்துகிறோம். ஆன்லைனில் வகுப்பெடுக்கிறோம் என்று சொன்னாலும் ஒரு ஆசிாியா் மாணவனுக்கு அருகில் நின்று அவனை தட்டிக்கொடுத்து அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்து  அவன் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் தக்க பதில் கூறி அவனுக்கு தகுந்த விதத்தில் பாடம் நடத்துகிற விதத்தில் இருக்கிற உயிரோட்டமான கற்பித்தலுக்கு இணையாக எந்த டெக்னாலஜியும் ஈடுகொடுக்க முடியாது,


கவா்ச்சி காட்டவும். கரன்சிகளை கட்டுக் கட்டாய் வாங்கவும் உதவுமே தவிர, மாணவா்களை அரவணைத்து அவனை நல்வழிப் படுத்தவும் நல்ல கல்வியை வழங்கவும் உதவாது.


கல்வி என்பது பாட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பது என்பது மட்டுமல்ல அவனது திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும். அவனது ஆளுமை திறமையை வளா்ப்பதாக இருக்க வேண்டும், அதை விடுத்து அறிவியல் வளா்சியை வைத்துக் கொண்டு என்னதான் அவனது மூளைக்குள் திணித்தாலும் அது ஒரு பயனையும் தராது,