தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இந்த ஆண்டுக்கான  கல்வி கட்டணம் இப்போதே வேண்டுமா?

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இந்த ஆண்டுக்கான  கல்வி கட்டணம் இப்போதே வேண்டுமா?


பள்ளி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான வேண்டுகோள்.......


அனைவருக்கும் வணக்கம் கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்று கிருமிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வீட்டில் தனித்திருங்கள் விழித்திருங்கள்.


 ஜூன் மாதம் பள்ளி திறக்குமா? திறக்காதா? பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி வருமா? வராதா? நமது பள்ளிகளை அரசு கொரோனா மையமாக மாற்றிவிடுமோ? பழைய மாணவர்கள் எல்லாம் வருவார்களா ?பாக்கி பணம் கட்டுவார்களா ? புதிதாக ஏதேனும் அட்மிஷன் வருமா ? என்கிற எண்ணற்ற கேள்விகளுடனும் ஏக்கமுடன் காத்திருக்கும் உங்களுக்கு என்றும் பக்கத்துணையாக உங்களை உயர்த்தவும் பாதுகாக்கவும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம்.. துணை நிற்கும்.


ஏப்ரல் மே மாத சம்பளம் கொடுத்து விட்டீர்களா அதன் விவரத்தை அனுப்புங்கள் என்று சி.இ.ஓ. அலுவலகம் கேட்டால் கவலைப்படாமல் எந்த பதிலும் சொல்லாமல் நம்மிடம் பணியாற்றியவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி பாதுகாக்க வேண்டும் எப்பொழுது சம்பளம் தர வேண்டும் எப்படி தருவோம் என்பதுகூடநமது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியும். எனவே யாரும் யாருக்கும் பயந்து கொண்டு எந்த தகவலையும் கொஞ்ச நாளைக்கு சொல்ல வேண்டாம். தர வேண்டாம். எது வந்தாலும் அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். மீதி வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கொரோனா மையங்களுக்காக அரசாங்கம் சென்னையில் பல்வேறு கல்யாண மண்டபங்களை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கவலைப்படவேண்டாம் அவசரப்பட்டு பள்ளியை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் வருத்தப்பட வேண்டாம்.பள்ளி கட்டிடம் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டால் உங்களை யாரும் எதுவும் செய்துவிடவும் முடியாது.


நமது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தனியார் வங்கிகள் பெற்றோர்களுக்கு கடனாகத் தந்து கல்விகட்டணம் கட்ட முன்வந்திருக்கிறது. பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று மாதத் தவணையாக அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நமது பள்ளிக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை முழுவதுமாக பள்ளிக்கு நேரடியாக கொடுத்துவிட சம்மதித்து ஒரு நிதி நிறுவனம் முன்வந்திருக்கிறது.


யாருக்கெல்லாம் மாணவர்களின் கல்வி கட்டணம் முழுமையாக வேண்டுமோ அவர்களுக்கு நமது மாநில சங்கம் கேரன்டி கொடுக்கும்.நமது மாநில சங்கத்தில் இந்த ஆண்டு உறுப்பினராக சேர்ந்து உங்கள் மாணவர்கள் கல்வி கட்டணம் ஒரே தவணையாக பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் பணப் பிரச்சனை தீர வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் பள்ளியின் பெயரையும்சங்கத்திற்கு செலுத்தவேண்டிய ஆண்டு சந்தாவையும் உடனே அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.


ஆர்.டி.இ.கல்வி கட்டணம் நாளை மாலைக்குள் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். பாக்கி தொகையும் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றோம்.


அரசு ஒரு மாணவனுக்கு ரூபாய் 32000  செலவு செய்கிறது. அந்தக் கட்டணத்தை பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிச்சயம் வெற்றி பெற்று நமக்கு வரவேண்டிய மொத்த பாக்கியையும் வசூலிப்போம்.


சொத்துவரி கட்டாமல் இருக்கவும் இன்சூரன்ஸ் ஓராண்டு சலுகை பெறவும்
டிடிசிபி கட்டிட அனுமதி இல்லாமல் தொடர் அங்கீகாரம் பெறவும்
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் மாற்றி உங்கள் பள்ளிகளை உயர்த்திட டி.சி இல்லாமல் ஒரு மாணவனைக் கூட நீங்கள் யாரும் எந்த மாணவரையும்.  சேர்க்கக் கூடாது என்று நீங்கள் உறுதி எடுத்துக் கொண்டால் அதற்கான ஆணை நிச்சயம் இந்த மாதமே கிடைக்க ஆவன செய்யப்படும். 


நமது பள்ளியின் டி.சி இல்லாமல் நமது பிள்ளைகளை சேர்க்கக்கூடிய பள்ளிகளை நாம் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்.


அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நாங்கள் லச்சக்கணக்கில் கேட்கவில்லை சங்கத்தின் ஆண்டு சந்தாவை மட்டும் இம்மாத இறுதிக்குள் செலுத்துகிறவர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் நிச்சயம் பெற்றுத் தருவோம்... என்கிற உறுதி மொழியோடு சங்கத்தின் வங்கி கணக்கு எண்ணை அனுப்பியிருக்கிறோம். உடனே உங்கள் ஆண்டு சந்தாவை அனுப்பி பதிவு செய்து கொண்டு பயன் பெறுங்கள் என்று அன்போடு வேண்டுகின்றோம். 


என்றும் கல்வி பணியில் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்.