குழந்தைகள் முகக்கவசம் அணிவது உயிருக்கு ஆபத்து – ஜப்பான் எச்சரிக்கை..!
2வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்து உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படாத நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது மட்டுமே அதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழியாகும். குழந்தைகளில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக இருந்தாலும், அவர்களின் குடும்பத்தார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவுகிறது என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏனெனில் முகக்கவசம் சுவாசிப்பதை கடினமாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் இருப்பதால் மாஸ்க் அணியும் பொழுது அவர்களின் இதயங்களின் சுமை அதிகரிக்கிறது. மேலும் முகக்கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படவும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டாம் என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.