தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் இப்போதே வேண்டுமா?
நமது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தனியார் வங்கிகள் பெற்றோர்களுக்கு கடனாகத் தந்து கல்விகட்டணம் கட்ட முன்வந்திருக்கிறது. பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று மாதத் தவணையாக அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நமது பள்ளிக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை முழுவதுமாக பள்ளிக்கு நேரடியாக கொடுத்துவிட சம்மதித்து ஒரு நிதி நிறுவனம் முன்வந்திருக்கிறது.
யாருக்கெல்லாம் மாணவர்களின் கல்வி கட்டணம் முழுமையாக வேண்டுமோ அவர்களுக்கு நமது மாநில சங்கம் கேரன்டி கொடுக்கும்.நமது மாநில சங்கத்தில் இந்த ஆண்டு உறுப்பினராக சேர்ந்து உங்கள் மாணவர்கள் கல்வி கட்டணம் ஒரே தவணையாக பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் பணப் பிரச்சனை தீர வேண்டும் என்றால் உடனடியாக உங்கள் பள்ளியின் பெயரையும்சங்கத்திற்கு செலுத்தவேண்டிய ஆண்டு சந்தாவையும் உடனே அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்.
சொத்துவரி கட்டாமல் இருக்கவும் இன்சூரன்ஸ் ஓராண்டு சலுகை பெறவும்
டிடிசிபி கட்டிட அனுமதி இல்லாமல் தொடர் அங்கீகாரம் பெறவும்
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் மாற்றி உங்கள் பள்ளிகளை உயர்த்திட டி.சி இல்லாமல் ஒரு மாணவனைக் கூட நீங்கள் யாரும் எந்த மாணவரையும். சேர்க்கக் கூடாது என்று நீங்கள் உறுதி எடுத்துக் கொண்டால் அதற்கான ஆணை நிச்சயம் இந்த மாதமே கிடைக்க ஆவன செய்யப்படும்.
நமது பள்ளியின் டி.சி இல்லாமல் நமது பிள்ளைகளை சேர்க்கக்கூடிய பள்ளிகளை நாம் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்.
அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நாங்கள் லச்சக்கணக்கில் கேட்கவில்லை சங்கத்தின் ஆண்டு சந்தாவை மட்டும் இம்மாத இறுதிக்குள் செலுத்துகிறவர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் நிச்சயம் பெற்றுத் தருவோம்... என்கிற உறுதி மொழியோடு சங்கத்தின் வங்கி கணக்கு எண்ணை அனுப்பியிருக்கிறோம். உடனே உங்கள் ஆண்டு சந்தாவை அனுப்பி பதிவு செய்து கொண்டு பயன் பெறுங்கள் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
என்றும் கல்வி பணியில் உங்கள்
கே.ஆர்.நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.