பள்ளி வாகன வாி அவகாசம் நீட்டிப்பு
30. 06.2020 வரை அகில இந்திய அளவில் இயங்கி வரும் அனைத்து வகை வாகனங்களுக்கும் மத்திய மாநில அரசுகள் இருக்கை வரி சாலை வரி கட்ட கால அவகாசம் வழங்கி உள்ளது. தமிழக அரசுமீண்டும் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 14.05.2020அன்று ஒரு உத்தரவு போட்டுள்ளதை தங்கள் அனைவருக்கும் அனுப்பி இருக்கிறேன். பள்ளி வாகனங்களுக்கு ஓடாத காலங்களுக்கு இருக்கை வரி சாலை வரி இன்சூரன்ஸ் எப்.சி. செய்வதற்கு விதி விலக்கு கோரி வருகின்றோம் எனவே யாரும் அவசரப்பட்டு ஆர்.டி.ஓக்கள் மிரட்டினால் பயந்து வரியை கட்டி ஏமாற வேண்டாம் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன் உங்கள்
கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.