முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய வேண்டும். முக்கிய ஆலோசனை

முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய வேண்டும். முக்கிய ஆலோசனை....


மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 


கொரோனா ஊரடங்கு என்றைக்கு முடியும் என்றைக்கு பள்ளிகளை துவக்குவோம் எப்படி துவக்குவோம் ஒருநாள் விட்டு ஒருநாள் வாரத்தில் இரண்டு நாட்கள் என்கிற எண்ணற்ற கேள்விகளுக்கிடையில்தற்போதுள்ள புதிய பாடத்திட்டம் அதிகபட்ச பாடல்களை கொண்டிருப்பதால் முழுதுமாக நடத்தி முடிக்க முடியுமா? பாடங்களை குறைப்பாத? தேர்வுகளை குறைப்பதா?  என்று எண்ணற்ற கேள்விகளோடு  தமிழக பள்ளிக்கல்வித்
துறையில் இந்த கல்வி ஆண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவ கல்வி தொடர வேண்டுமா-? அல்லது ஒரே ஒரு புத்தகம் தரலாமா?பாடங்களை குறைக்கலாமா என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று வல்லுநர் குழு கூட்டம் கூடி தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 


திங்கட்கிழமை மாலைக்குள் நமது சங்கத்தின் சார்பில் உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய அரசு நம்மை கேட்டுள்ளது.. எனவே நமது சங்க உறுப்பினர்கள் 
பள்ளி நிர்வாகிகள் தலைசிறந்த ஆசிரியர் பெருமக்கள் பாட வாரியாக வகுப்பு வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழக சமச்சீர் கல்வி பாட புத்தகத்திலிருந்து, எதை நீக்கலாம் ,எதை சேர்க்கலாம்,. கேள்வித்தாள்கள் எப்படி அமைய வேண்டும் , தேர்வுகளை எப்படி நடத்திட வேண்டும். என்கிற தங்களின் மேலான ஆலோசனைகளை உடனடியாக நம் சங்கத்தின் வாட்ஸ்அப் குழுக்களில் பதிவு செய்யலாம், எழுதி அனுப்பலாம். 


இதுகுறித்து வரும் திங்கட்கிழமை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் Zoom Video Conference இணையவழி கருத்தரங்கில் அனைத்து ஆசிரிய அறிஞர் பெருமக்கள் பள்ளி நிர்வாகிகள் தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.


தங்கள் உண்மையுள்ள 
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.