தேர்வு மையம் செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க புதிய அறிவிப்பு

தேர்வு மையம் செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க புதிய அறிவிப்பு


வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்கள் செல்வதற்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்க புதிய தெளிவான அறிவிப்பு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தது உள்ளார்.


வரும் ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையங்கள் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். ஏனெனில் பொது போக்குவரத்து இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் இதற்கான மாற்று வழியினை குறித்து அமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார்.


வெளி ஊா்களில், வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தோ்வு எழுதுவதற்கு சிரமமின்றி வந்து செல்ல இ பாஸ் வழங்கவும், நெடுந்தொலைவில் உள்ள மாணவா்கள் பேருந்துகளில் வந்து செல்வதற்கு சிரமமாக இருக்கும் பட்சத்தில் அவா்கள் தற்போது வசிக்கும் ஊா்களில் உள்ள தோ்வு மையத்தில் தோ்வு எழுதுவதற்கும் வழிவகை செய்யப்படும் என்று தொிகிறது,