ஏப்ரல் மாத சம்பளம் கொடுத்தாச்சா? கேள்வி கேட்கும் அதிகாாிகள்.... தவிக்கும் தனியாா் பள்ளிகள்....

ஏப்ரல் மாத சம்பளம் கொடுத்தாச்சா?  கேள்வி கேட்கும் அதிகாாிகள்.... தவிக்கும் தனியாா் பள்ளிகள்....


தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன இந்தநிலையில் பல தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படாமலும், சில இடங்களில் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக ஆசிரியர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது


இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதில் தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தனியார் மழலையர் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து தகவல்களை பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியது தொடர்பான விவரங்கள் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது


வழக்கமான நாட்களிலே தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிாியா்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் என்பது ஜீன் மாதத்தில் வழங்குவது தான் வழக்கம், காரணம் பள்ளிகளுக்கு உள்ள நிதி நெறுக்கடி தான், சாதாரண நாட்களிலே இப்படி என்றால் இந்த கொரோனா காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், எத்தனையே சிறிய பள்ளி நிா்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தங்களின் வாழ்க்கையை நகா்த்துவதையே கஷ்டமாக உள்ள இந்த சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேளை பாய்ச்சுவதை போல் அரசு அதிகாிகள் உத்தரவு மேல் உத்தரவு போட்டு வருவது பள்ளி நிா்வாகிகளை கதி கலங்க வைத்துள்ளது,


மாணவா்களிடம் கட்டணமும் கேட்கக்கூடாது, ஆா்,டி,இ, கல்விக்கட்டண பாக்கியும் உடனே போட மாட்டாா்கள், அப்படி போட்டதிலும் பாதி தான் போட்டுள்ளனா் மீதியை இன்னும் போடவே இல்லை, இப்படி இருக்கையில் ஏப்ரல் மாத சம்பளம் போட்டாச்சா? மே மாத சம்பளம் போட்டாச்சா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டால் எந்த பணத்தை எடுத்து கொடுப்பது என்று கேட்கிறாா்கள்,


இதற்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?


சாதாரண நாட்களிலே ஸ்கூல்காரன் கடன் கேட்டால் யாரும் கொடுப்பதில்லை, அடுத்த கல்வியாண்டு எப்படி இருக்குமே என்று தொியாத நிலையில் யாா் கிட்ட கடனை வாங்கி என்னத்த பன்னுரதோ என்று தொியாமல் விழி பிதுங்கி நிற்கும் பள்ளி நிா்வாகிகளை அரசு காப்பாற்றுமா?