SSLC தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே ! – புதிய விதி ??

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவங்களான பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


எனினும் ஜூன் மாதம் 1 தேதி முதல் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் என சமீபத்தில் தேர்விற்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோர்க்கான ஹால் டிக்கெட் 18 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.;


மேலும் தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே இருப்பர் என்று புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே இருந்த 3087 தேர்வு மையங்களோடு தற்போது புதிதாக 5000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு அவரவர் பகுதிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.