இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் இப்போதே வேண்டுமா-?
உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டுக்கான 2020 -21 கல்விக் கட்டணத்தை பெற்றோர்களுக்கு வட்டியில்லா கடனாக நமது சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் மூலம் பெற்றோர்களின் பிரச்சனை தீரும் நமக்கு முழு பணமும் சிக்கலில்லாமல் இழுத்தடிக்காமல் தள்ளுபடி இல்லாமல் Single payment வந்து சேரும் . உங்களுக்கு வேண்டிய பணத்தை மாநில சங்கத்திடம் கேட்டு பெற்றுப் பயனடையுங்கள்.
இந்த2019..20 கல்வியாண்டிற்கான நமது சங்கத்தின் ஆண்டு சந்தா நர்சரி பிரைமரி பள்ளிகள் ரூபாய் 2,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ரூ 4000 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ரூ5000 கட்டுகின்ற பள்ளிகளுக்கு மட்டும் இந்த ஆண்டுக்குரிய கல்வி கட்டணத்தை உங்களுக்கு உங்கள் பெற்றோர் ஒப்புதலுடன் முழு கட்டணத்தையும் பெற்றோர்களுக்கு கடனாக தந்து 10 மாத தவணையாக திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
உலகப் பணக்காரர் சுனாமி புகழ் விவேக் ஓபராய் அவர்களுடைய நிறுவனம் நமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நமது சங்கம் தரும் உத்தரவாதத்தை ஏற்று நமது சங்க உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தயாராகிவிட்டார்கள்... நமது பள்ளி நிர்வாகிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதை தவிர வேறு வழி கிடையாது.
எந்த வங்கியும் உடனடியாக நமக்கு கடன் தராது நாமும் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி கட்டாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பல்வேறு ஆவணங்களை தந்தாலும் உடனடியாக யாரும் கடன் தருவதில்லை
நாம் எந்த ஆவணத்தையும் தரவேண்டியதில்லை நமக்கு வர வேண்டிய கல்விக் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்வோம். பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும்.உனது ஓராண்டு பிரச்சினையும் தீர்ந்துவிடும் பெற்றோர்களும் நம்மை ஏமாற்ற முடியாது இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் நம்மை விட்டுப் போக மாட்டார்கள் நமது பள்ளிகளையும் வளர்த்து விடலாம்...
நமது சங்கம் செய்திருக்கிற மிகப்பெரும் சாதனைகளில் இதுவும் ஒன்றாக அமையும் எனவே யாருக்கெல்லாம் மொத்த கல்விக்கட்டணம் உடனே வேண்டுமோ அவர்கள் உங்கள் பள்ளியின் ஆண்டு சந்தாவை உடனே அனுப்பி உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக உரிய விண்ணப்பங்கள் அனுப்பி உடனே பணத்தை வழங்க ஏற்பாடு செய்கின்றோம். .
அன்புடன்
என்றும் தனியார் பள்ளிகளில் நலம் நாடும் உங்கள்
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.