ஓடாத தனியார் பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரி கட்டச்சொல்லி வற்புறுத்தாதே....
அனுப்புதல்.....
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைமற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். எண்.6.ஏகாம்பரம்தெரு , பம்மல் சென்னை.75. 12.05..2020
பெறுதல்....
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
தமிழ்நாடு அரசு
புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் சென்னை. 9.
வழி.....
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள்.
உயர்திரு. போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்.சென்னை.9..
பொருள்.....
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களின் இருக்கை வரி
சாலை வரி ..எஃப்.சி செய்வதற்கு எமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மத்திய மாநில அரசுகள் 30.06.2020 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களுக்கு வரி கட்டச் சொல்லி மிரட்டி வருவதை உடனே கைவிட்டு 30.06.2020 வரை உள்ள விதிவிலக்கை அமல்படுத்தவும் பள்ளி வாகனங்களுக்கான ஓடாத மாதங்களுக்கு வரியை ரத்து செய்யவும் வேண்டி கோரிக்கை விண்ணப்பம்.
...
ஐயா.... வணக்கம்....
தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளுக்காக சுமார் ஐம்பதாயிரம் பஸ் வேன்கள் இயங்கி வருகிறது. இந்த வாகனங்களுக்கு F.C செய்ய சாலை வரி
இருக்கை வரி இன்சூரன்ஸ் கட்ட மத்திய மாநில அரசுகள் 30.06.2020 வரை விதிவிலக்கு வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் தமிழ்நாடு முழுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் தொலைபேசியில் அழைத்து பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தமிழக அரசு போட்டுள்ள இந்த ஆணைஎங்களுக்கு வரவில்லை என்றும் இன்னும் கணினியில் 30.06. 2020 வரை விதிவிலக்கு வழங்கியதற்காக மாற்றப்படவில்லை. எனவே எங்களால் ஏற்க முடியாது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனே அனைத்து வரிகளும் கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதித்து வசூலிக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.
இந்த கொரோனா காலத்தில் பழைய புதிய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. பள்ளி செயல்படகூடாது என்று அறிவித்துள்ள நிலையில் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ள இந்த நேரத்தில் லட்சக்கணக்கான வரி கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
எனவே தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் ஆணையாளர் அவர்களும், இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு பள்ளி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் உரிய விதிவிலக்கு ஆணையைவிளக்கியும்மார்ச் ஏப்ரல் மே ஜீன் கொரோனா ஊரடங்கில் ஓடாத பள்ளிவாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்கி
F.C. செய்து தர வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்.
தங்கள் உண்மையுள்ள
கே. ஆர்.நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்