தூய்மை பணியாளா்களுக்கு நிவாரண உதவி

தூய்மை பணியாளா்களுக்கு நிவாரண உதவி



ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஊராட்சியில், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு, அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சி.எஸ்.ஜெயின் கல்வி குழும தாளாளர் மகாவீர் சந்த் வழங்கினார். நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் மதன், துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி செயலாளர் நாகராஜன்,  உதவியாளர் பாலதண்டபாணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.