தேவையற்ற செய்திகளை பாா்வா்டு செய்யாதீா்கள்.....! சங்கத்தின் ஒற்றுமையை பாதுகாத்திடுங்கள்.....!!

தேவையற்ற செய்திகளை பாா்வா்டு செய்யாதீா்கள்.....! சங்கத்தின் ஒற்றுமையை பாதுகாத்திடுங்கள்.....!!


மரியாதைக்குரிய நமது சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கி இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணம் கடுமையான உழைப்பு மட்டுமல்ல எண்ணற்ற திட்டங்கள் செயல்பாடுகள் போராட்டங்கள் வழக்குகள் அரசியல் கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகளின் எதிர்ப்புகள் தொலைக்காட்சி விவாதங்கள் விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நமது சங்கத்தை வளர்க்க ஊர் ஊராகச் சென்று கூட்டங்கள் நடத்தி பள்ளி நிர்வாகிகளை சந்தித்து பேசி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சங்கத்தை உருவாக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.


நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுயவிளம்பரம் தேடும் வகையிலும் அரசியல் செய்வதிலும் கவனம் செலுத்துவது வருத்தமளிக்கிறது வேறு சங்க நிர்வாகிகளின் விமர்சனங்களை எந்த காரணம் கொண்டும் நமது குழுக்களில் பார்வேர்ட் மெசேஜ் செய்யக்கூடாது என்று பலமுறை சொல்லிவிட்டேன்


யாராக இருந்தாலும் தங்கள் பள்ளியின் பெயரையும் தங்கள் பெயரையும் போட்டு செய்தி போட்டால் அதுவும் எனக்கு பர்சனலாக போட்டாலும் கவனிப்பேன் அதை விட்டுவிட்டு வாட்ஸ்அப் குழுவில் போட்டு அதில் சுய விளம்பரம் தேட கூடாது. 


உண்மைக்கு மாறான செய்திகளை போடும் மாற்றுச்சங்கத்தாரின் செய்திகளை எல்லா குழுவிலும் பகிர்வது என்ன நியாயம்.வலுவாக இருக்கும் சங்கத்தை உடைப்பதாக செய்யக் கூடிய பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று அதற்கு நமது சங்க நிர்வாகிகள் உடன் படக்கூடாது


ஒரு பிரச்சனையை கோரிக்கையை எப்பொழுது யாரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று மாநில தலைமைக்கு தெரியும் உங்களுக்கு அது மட்டும் தான் பிரச்சனை எங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக தான் பொறுமையாகத்தான் செய்ய முடியும்


அதுவும் இந்த கொரோனா காலத்தில் கல்வி கட்டண பாக்கியை பெற்று தந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. நமது கோரிக்கைக்கு அரசு பதில் எழுதியிருக்கிறது வந்தவுடன் எல்லோருக்கும் கிடைக்கும்.அதை விட்டுவிட்டு எவனோ போடுகிற செய்தியை நீங்கள் ஏன் பார்வேர்ட் செய்ய வேண்டும்.


அந்த கோரிக்கைகள் போய் கடையில் வாங்கி வர முடியாது. அரசை கேட்டு நிர்ப்பந்தித்துத்தான் பெறமுடியும். அமைச்சர் செய்ய நினைத்தாலும் அதிகாரிகள் செய்ய விட மாட்டார்கள் .


இவ்வளவு பேசுகிறார்களே., நமது வாட்ஸ்அப் குழுவில் உள்ள எத்தனை பள்ளி நிர்வாகிகள் சங்க நிகழ்ச்சிகளில் முழுமையாக கலந்துகொள்கிறார்கள் சங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஆண்டு சந்தாவை செலுத்து கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


பலரும் நம்மை ஊறுகாய் போல் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது..
முதலில் நமது சங்கத்தினுடைய தலைவர்கள் ஆளுக்கு ஒருவரை புதிதாக உறுப்பினராக சேர்த்து விட்டு இந்த ஆண்டிற்கான கடமையை தொடங்குஙகள் 
என்று அன்போடு வேண்டுகிறேன்.


இந்த குழுவில் மிக முக்கியஸ்தர்கள் மிகப்பெரும் பள்ளிகளில் அறிவாளிகள் அறிஞர் பெருமக்கள் எல்லாம் இருக்கிறார்கள் அவர்கள் மனது புண்படாமல் நடந்துக் கொள்ளும் முயற்சி செய்யுங்கள்.


 உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளின் செல்போன் எண்களையும் இந்த வாட்ஸப் குழுவில் முதலில் சேருங்கள் பின்னர் அவர்களை உறுப்பினர் ஆக்குங்கள். மிக விரைவாக மாநில தலைமைச் செயற்குழு கூடி மிக முக்கிய முடிவுகளை எடுத்து அதை அமல்படுத்துவோம்.


அன்புடன் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்