மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் E-PASS பெற
🗣️மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் 10 வகுப்பு தேர்வு மையங்களாக மாற்றம். ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர்.12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன.
🗣️அரசு, உதவி பெறும் (தொடக்க, நடுநிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணிபுரியும் பள்ளிக்கு அருகில் உள்ள அவரவர் வசிப்பிட பகுதியில் இருக்க வேண்டும், வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 20.05.2020-ற்குள் வந்து இருக்க வேண்டும். அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் 20.05.2020- காலை 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.
🗣️மேலும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேர்வு பணிக்கு தயார்நிலையில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு BEO Whatsapp குழுவில் (20.05.2020) அன்று 11.00 மணிக்குள் தலைமை ஆசிரியர்கள் உறுதிமொழி சான்று அளிக்க வேண்டும்.
🗣️இருதய நோய் உள்ளவர்கள், தற்பொழுது அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போன்றோருக்கு தேர்வு பணியிலிருந்து தவிர்பு வழங்கப்படும். ஏனைய பிற ஆசிரியர்களுக்கு தேர்வு பணியிலிருந்து தவிர்பு வழங்க இயலாது கண்டிப்பாக பணியில் ஈடுபட வேண்டும். தேர்வு பணியில் மேற்குறிப்பிட்ட தவிர்பு வழங்கப்பட உள்ள பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் உரிய விளக்கத்துடன் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை தொடர்புகொண்டு மருத்துவ சான்றிதழ் வழங்கினால் மட்டுமே தவிர்பு வழங்கப்படும்.
🗣️மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் E-PASS பெற விண்ணப்பிப்பதற்கான link : https://tnepass.tnega.org/#/user/pass