எச்சாிக்கையாக இருங்கள் தாளாளா்களே.......!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகளுக்கு வணக்கம்.
தமிழக அரசு தெளிவாகச் சொல்லியிருக்கிறது இந்த ஊரடங்கு காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று அறிவித்திருக்கிறது. கல்விக்கட்டணம் வசூலிப்பது மாணவர்கள் சேர்க்கை நடத்துவது. மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி அவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்த கூடாது என்றும் அறிவுறுத்தி அரசு ஆணையிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு 11..12 அரசு பொதுத்தேர்வு முடிவுகளெல்லாம் மாணவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். தமிழக அரசு நிச்சயம் கருணை காட்டும். இப்பொழுது மாநில அளவில் முதல் மதிப்பெண் இரண்டாம் மதிப்பெண் மூன்றாம் மதிப்பெண் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் இந்த மதிப்பெண்கள் வேறு எந்த நுழைவுத்தேர்வுக்கும் பயன்படாது என்பது உங்களுக்கும் தெரியும் எதற்காக இந்தமாதிரி கொரோனா காலத்தில்... சிறப்பு வகுப்புகள் இதனால் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மதிப்பு மரியாதை குறைகிறது.
அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டு நாம் எதில் மாட்டுவோம் என்று நமது எதிரிகள் எல்லாம் காத்திருக்கிறார்கள்.
உலகமே இன்றைக்கு சுருங்கிப்போய் நம்மை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்களெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகிகள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
நமது சங்கம் மிகச் சாதுரியமாக காய் நகர்த்தி நமது கோரிக்கைகள் வெற்றி பெற்று நீங்கள் எல்லாம் உயர்ந்து ஒளி வீச வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றக்கூடிய இவ்வேளையில் ஓரிருவர் செய்யக்கூடிய தவறுகளால் நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு மாணவனை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தி பள்ளி சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி சார் ஆட்சியர் நேரில் வந்து சீல் வைத்து விட்டு சென்றுவிட்டார்.
பள்ளி நிர்வாகிகள் செய்யும் எதிர்வினை களுக்கு எல்லா நிர்வாகிகளும் பாதிக்கப்படுவார்கள். நாம் இந்த ஆண்டு பள்ளி கட்டணம் உயர்த்த மாட்டோம் என்று அறிக்கை விட்டால் சிலர் 50% உயர்த்துங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
உடனே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாம் ஜூலை மாதம்1ஆம் தேதி பள்ளி தொடங்க வேண்டும் என்று அரசுக்கு சொன்னாள் ஆகஸ்ட் மாதம் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். இப்படி சில லெட்டர்பேட் சங்கங்களின் கோமாளித்தனமான காரியங்களால் தான் பலரும் பாதிக்கப்பட வேண்டி வருகிறது.
இதுபோன்ற காலங்களில் சற்று பொறுமை காத்து மாநிலசங்கம் என்ன சொல்கிறது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
அப்போதுதான் நாம் நம்மையும் நமது பள்ளிகளையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும். இல்லை என்றால் அவமானமும் நஷ்டமும் பிரச்சனைகளும் சிக்கல்களும் வரத்தான் செய்யும்.
நமது சங்கம் என்றைக்கும் எவ்வளவு அவமானங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் பிரச்சனைகள் வந்தாலும் இதையெல்லாம் தாங்கிக்கொண்டு
தனியார் பள்ளிகளின் நலம் மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு செயல்படுவோம் எங்களை நம்பி வருபவர்கள் வரலாம் வராதவர்கள் மேற்கண்ட கஷ்டங்கள் எல்லாம் படத்தான் வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தை நம்பினோர் கெடுவதில்லை என்றும் கைவிடப்பட மாட்டார்கள் அவர்களை உயர்த்துவோம். பாதுகாப்போம் என்ற உறுதியோடு....,.
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்கும் முயற்சியில் நமது சங்கத் தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை
சேர்த்திட்ட வகையில் அரசு தரவேண்டிய கல்விக்கட்டணபாக்கி 40 சதவீத பணத்தை உடனே தர வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு மாநில அரசுக்கு இன்னும் பணம் முழுமையாக தராததால் தந்தவுடன் நிச்சயம் பெற்றுத்தருவோம்.
சென்னை மாவட்டத்தில் இருக்கக்கூடிய நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இன்னும் ஒரு பைசா கூட வழங்கவில்லை. அதையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலியுறுத்துவோம்....
இந்த ஆண்டு ஆர். டி.இ.25 சதவீதம் மாணவர்களை சேர்க்கும் அரசு ஆணையை உடனே வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றோம். மேற்கண்ட கோரிக்கைகளில் வெற்றிபெற நீங்கள் அனைவரும் இந்த மாநில சங்கத்தில் உறுப்பினராகி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன்.
என்றும் கல்வி பணியில் உங்கள்
கே.ஆர்.நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.