40 % வந்துவிடும் .... நம்பிக்கையோடு இருங்கள் நண்பா்களே....!
அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு
இனிய வணக்கம்
நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு RTE கல்விக் கட்டணம் 40 சதவீதம் இன்னும் வரவில்லை என்கிற குறைபாடும் அனைத்து நர்சரி பிரைமரி பள்ளிகளும் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது.
நர்சரி பிரைமரி பள்ளிகள் எக்காரணம் கொண்டும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை யாரும் வருத்தப்படாதீர்கள் நமது மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.K.R.நந்தகுமார் அவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நமது தனியார் பள்ளிகள் நலன் சார்ந்த விஷயங்களை அடிக்கடி அவ்வப்போது அரசாங்கத்திடம் பேசியும் அறிக்கையாகவும் வெளியிட்டு வருகிறார் .
அரசாங்கம் மீதம் இருக்கக்கூடிய 40 சதவீத கட்டணத்தை கொடுத்துவிடுவார்கள் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள்,மற்றும் 12ம் வகுப்பு தேர்வு தாள்களை திருத்தும் பணிகளும், கொரானா ஒழிப்பு பணிகள் ஒருபுறமும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாம் அரசாங்கத்தின் மேலும்,நம் சங்கத்தின் மேலும் நம்பிக்கை கொள்வோம் .நமது மாநில பொதுச்செயலாளர் அனைத்து பள்ளிகளையும் ஒரே மாதிரியாகவே பார்க்கக்கூடியவர். அவர் நிச்சயம் பெற்றுத்தருவார் அரசாங்கம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது எனவே யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் மாநில சங்கத்திற்கான சந்தா தொகையை அனைத்து பள்ளிகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டியது தான். அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் நமது பொதுச் செயலாளர் பலமுறை அவருடைய வங்கிக் கணக்கு எண்ணை தெரிவித்திருக்கிறார்
நாமும் இரண்டு மூன்று முறை சந்தாவிற்கான செய்தியை பதிவிட்டிருந்தோம் ஆனாலும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் சந்தா செலுத்தவில்லை என்பது வருத்தமே.அனைவரின் சூழ்நிலையை அனைவருமே அறிவோம்.இருந்தாலும் இந்த இக்கட்டாண சூழ்நிலையில் நமக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது பொதுச் செயலாளரின் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.
காரணம் நமக்கும் நம் பள்ளிகளுக்கும் பல்வேறு செயல்திட்டங்களை செய்துகொண்டும் சிலவற்றிற்கு நீதிமன்றங்களை நாடும் பணிக்காகவும், நிர்வாக பணிகளுக்காகவும் சங்கத்தை சிறப்பாக செயல்படுத்தவும் மாநில பொதுச்செயலாளருக்கு சந்தா தொகையையாவது நாம் இந்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
எனவே அனைத்து பள்ளி நிர்வாகிகளும் உடனடியாக உங்கள் பள்ளி சந்தா தொகையினை நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு உங்கள் பள்ளி உங்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
P.S.கணேசன் மாவட்ட தலைவர் ,
D.மகேந்திரன் மாவட்ட செயலாளர்
T.M.கிருஷ்ணன் மாவட்ட துணைத் தலைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்.