குடிப்பதற்கு தடையில்லை...... படிப்பதற்கு தடையா....?
இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டார்கள் குடிப்பதற்கு தடை இல்லை படிப்பதற்கு தடை போட்டு விட்டார்கள் அனைத்து கடைகளும் திறந்து இருக்கிறது. மக்கள் நடமாட்டமும் அமோகமாக நடக்கிறது. ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தவில்லை பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் இல்லை . எப்போது பள்ளி திறப்பார்கள் என்பது தெரியவில்லை. பழைய புதிய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. ஆனால் மார்ச் ஏப்ரல் மே மாதத்திற்கான சம்பளத்தை மட்டும் கொடுத்துவிடு என்று அரசு ஆணையிடுகிறது.
மாணவர்கள் சேர்க்கை எப்படி செய்யப் போகிறோம் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
அரசு... பள்ளியை எப்போது திறக்க சொல்கிறதோ அதுவரை காத்திருக்க வேண்டுமா எண்ணிப்பாருங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து பள்ளியில் இருவர் மட்டும் அமர்ந்து பள்ளி மேலாண்மை பணிகளை செய்யத் தொடங்குங்கள்.
மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்துங்கள் வரவேண்டிய பழைய புதிய கல்வி கட்டண பாக்கிகளை மனிதாபிமானத்தோடு பேசி... கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொள்ளுங்கள்.
புதிய பாட நோட்டு புத்தகங்களை மாணவர்களுக்கு தருவதற்கு தயாராகுங்கள்... பள்ளி வகுப்பறைகள் முதல் விளையாட்டு மைதானம் வரை அனைத்தையும் சுத்தப்படுத்தி
சுகாதாரம் பேண முயற்சி செய்யுங்கள்.
எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதை உறுதி செய்து அதற்கான பட்டியலை தயார் செய்து சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வீட்டுக்கு அனுப்புங்கள். இதையெல்லாம் முழுமையாக செய்வதற்கு ஜூன் மாதம் ஆகிவிடும். அதற்குள் ஒரு நல்ல முடிவு தெரியும் . அது வரை தொடர்ந்து பெற்றோர்களுடனும் பிள்ளைகளுடனும் தொடர்பில் இருங்கள்.
அது உங்கள் பள்ளியை மேம்படுத்தும் நீங்களும் பெற்றோர்களும் வருவதும் போவதும் தெரியாமல் பள்ளி மெயின் கேட்டை சாத்தியே வைத்திருந்து ஒவ்வொருவராக வகுப்பு வாரியாக வரவழைத்துப் பக்குவமாகபேசி புரியவைத்து உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுங்கள்.
ஒருவரைக் கூட டீ.சி இல்லாமல் சேர்க்க வேண்டாம்.நமது இலக்கு இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்கள் புதியசேர்க்கை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக நாளைமுதல் பள்ளி அலுவலகத்தை திறந்து அமைதியாக ஆரவாரமின்றி கொரோனா தொற்று நோய் கிருமி உங்களை மட்டுமல்ல யாரையும் தொட்டு விடாமல் பார்த்து பணியாற்றுங்கள்.