மே 17க்கு பிறகு பள்ளிகளை திறக்க தயாா் ஆவோம்......
தனியார் பள்ளிகளை திறக்கவும் கல்வி கட்டண பாக்கியை வசூலிக்கவும்
கல்விப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி வழங்கிட வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.....
அனுப்புதல்..
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் .
கதவிலக்கஎண். 6 ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை 75. நாள் 07.05.2020 .
பெறுதல்....
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்.
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம். chennai-9
வழி ....
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு chennai-9
பொருள்..
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் அலுவலகங்கள்திறந்து பணியாற்றுவதற்கு பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதற்கு அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க பழைய பள்ளி கல்வி கட்டண பாக்கியை வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கிட வேண்டி கோரிக்கை விண்ணப்பம்...
ஐயா... வணக்கம்
தமிழக அரசு கொரோனா நோய்க்கிருமியை கட்டுப்படுத்துவதற்கு
மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இதயபூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
50 நாட்களாக தமிழக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிற நேரத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்து ஐ.டி நிறுவனங்களில் கோவில்களில் 33 சதவீதம் பேர் வேலை செய்யலாம் என்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீதத்துக்குக் குறையாமல் வேலை செய்வதற்கு அனுமதி தந்து பல்வேறு வணிக நிறுவனங்கள் திறந்து வியபாரம் செய்திட.... முக்கியமான பணிகள் யாவும் நடைபெறவும் போக்குவரத்தை சீர் செய்து மக்கள் பயனடையும் வண்ணம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் செய்து வரும் தமிழக அரசை வாழ்த்துவதில் வணங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இந்நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் செயல்பட வில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அறிவித்தாலும் அதற்கான கோப்புகளை தயாரிக்கிற பணிகளையும் செய்திடவேண்டும். பள்ளிக்கு செலுத்தவேண்டிய மூன்றாம் பருவ கல்வி கட்டண பாக்கியும் செலுத்த வில்லை. முழு ஆண்டுத் தேர்வு நடைபெறாததால்.
பாக்கி கல்வி கட்டணம் வசூலிக்காததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் பழைய பள்ளி கல்வி கட்டண பாக்கியை வசூலித்துக் கொள்ள அந்த அரசு அனுமதி தந்துள்ளது.டெல்லி உயர் நீதிமன்றமும் கல்வி கட்டணம் கட்டுவது பெற்றோர்களின் கடமை அதை வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இனியும் நாம் காலம் தாழ்த்தினால் பெற்றோர்கள் வீண் செலவு செய்து அது அவர்களுக்கே பெரும் சுமையாக அமையும் என்பதால் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகளை கல்வி கட்டணம் கட்ட நாங்கள் வருகிறோம் எங்களை அனுமதியுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் தமிழக அரசு கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி தரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.
எனவே பள்ளி அலுவலத்தை மட்டும் திறந்து பழைய பள்ளி கல்வி கட்டணத்தை மட்டும் வசூல் செய்துகொள்ள சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாத்து வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ள பத்தாம் வகுப்பு தேர்வுஅறைகளை சுத்தம் செய்திட
10,11,12ஆம்வகுப்பு தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கான வகுப்பறைகளை தயார் செய்திட தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டு தனியார் பள்ளிகள் திறந்து சமூக இடைவெளியோடு ஓரிருவர் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமாய் பணிவோடு வேண்டுகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்