விடைத்தாள்களை திருத்து ..! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்து...!! தமிழக அரசுக்கு கோாிக்கை
11-12 ஆம் விடைத்தாள்களை திருத்து ...10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்து என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு....
அனுப்புதல்
கே.ஆர். நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். க.எண்.6.
ஏகாம்பரம் தெரு.பம்மல் சென்னை .75.
பெறுதல்......
மாண்புமிகு .தமிழக முதல்வர் .அவா்கள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை. சென்னை..9.
வழி.......
மாண்புமிகு பள்ளிக்கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள்.
பொருள்...
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து +1 +2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை உடனடியாக திருத்தவும் நிலுவையில் உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டி வேண்டுதல் விண்ணப்பம்.......
ஐயா....
வணக்கம்.... தமிழக அரசு கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய்க்கிருமி யாரையும் தொட்டு விடாமல் இருக்க எண்ணற்ற விழிப்புணர்வு பணிகளை மிகச் சிறப்பாக செய்து தமிழக மக்களை பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியது.
இந்தத் தொற்று நோய்க் கிருமி யாரையும் தொட்டு விடாமலிருக்க எடுத்துவரும் எல்லையில்லா நடவடிக்கைகளுக்கு எமது சங்கம் என்றைக்கும் துணை நிற்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காக தவம் இருக்கிறார்கள். கொரோனா தொற்றுநோய் கிருமியின் காரணமாக தேர்வு விடைத்தாள்களை திருத்தாமல் 60 நாட்களாக நிலுவையில் உள்ளதால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சமுதாய இடைவெளிவிட்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்து விடைத்தாள்களை திருத்தலாம். அல்லது பழைய முறைப்படியே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கு தேர்வு விடைத்தாள்களை அனுப்பி டம்மி நம்பர் போட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் எந்த மாவட்டம் யாருக்கு வந்திருக்கிறது என்று கூட தெரியாமல் விடைத்தாள்களை ஆசிரியர்களின் வீட்டிற்கே அனுப்பிவைத்தால் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து திருத்தி மதிப்பெண்களை போட்டு அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மதிப்பெண் பட்டியல் தயாரித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மத்திய அரசின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் கூட ஒன்னரை கோடி விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களின் வீட்டிற்கே அனுப்பி திருத்த அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
நிலுவையில் உள்ள 10 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கூட பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஒரு பாடம் நிலுவையில் உள்ளதை நடத்தி முடிக்கவும்.... பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு உடனடியாக நடத்தவும்.. கால அட்டவணையை வெளியிட்டால் மாணவர்கள் மன உளைச்சல் இன்றி அரசு பொதுத்தேர்வு எழுத ஏதுவாகும் ......
தொற்றுநோயை தொடாமல் இருக்க இன்னும் அதிகமான தேர்வு மையங்களை உருவாக்கி மிகப் பெரும் சமூக இடைவெளி யோடு தேர்வுகளை நடத்துவதற்கு தனியார் பள்ளிகள் அத்துணை பேரும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி காத்திருக்கின்றோம்.
நீண்ட விடுமுறை விட்டதன் காரணமாக ஒன்பதாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்று அறிவித்ததன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வையும் அப்படி செய்து விடுவார்களோ என்று மாணவர்கள் படிக்காமல் கால நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் பலரும் மிகுந்த கவலையோடு மன உளைச்சலுக்கு உள்ளாகி என்ன நடக்குமோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பெற்றோர்கள் மாணவர்கள் கவலையை போக்கும் வண்ணம் உடனடியாக அரசு..... நிலுவையில் உள்ள பொது தேர்வுகளை நடத்தி
10 ; 11 ; 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டு பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் எல்லோருக்கும்
மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் தர வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்..
உண்மையுள்ள
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.
10.05.2020