10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனி மனித இடைவெளியின்றி சிறப்பு வகுப்பு- தருமபுரி அரூரில் தனியார் பள்ளிக்கு சார் ஆட்சியர் பிரதாப் சீல்
அரூரில் சில தனியார் பள்ளிகள் 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு இந்த கொரோனா நேரத்திலும் சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறார்கள் என்றும், வெளி மாவட்ட மாணவர்களையும் பள்ளிக்கு சிறப்பு வகுப்பு வர வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இன்று சார் ஆட்சியர் திரு . மு. பிரதாப், இ.ஆ.ப அவர்கள் தனியார் பள்ளி மேற்பார்வையிட்டு அரூரில் தனியார் பள்ளியில் வகுப்பு நடைபெற்று வந்ததை நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்த பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். அரசு அறிவுரைப்படி கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த கூடாது. சில பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் சிறப்பு வகுப்பு, டியூசன் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.