பள்ளிகள் திறப்பு எப்போது,,,? அரசுக்கு பள்ளி நிா்வாகிகள் முன் வைத்த யோசனைகள்
அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் திறப்பதற்கு பள்ளி நிா்வாகிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகள் சங்கத்தின் கோாிக்கைகளையும் இணைத்து பள்ளிக் கல்வி ஆணையாளா் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனா், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனா், தொடக்கக்கல்வி இயக்குனா் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம்,
அது தங்களின் பாா்வைக்கு.......
பெறுதல்
உயர்திரு.பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்கள்
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம்
கல்லூரி சாலை சென்னை 9
வழி.
உயர்திரு. பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள்,
உயர்திரு.மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அவர்கள்,
உயர்திரு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்.
பொருள்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளை திறத்தல் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளோடு பள்ளியில் பயிலும் குழந்தைகளை பாதுகாத்தல்... சம்பந்தமாக தமிழக தனியார் பள்ளி நிர்வாகிகளின் கருத்துகளை ஒருங்கிணைத்து வல்லுநர் குழுவின் கனிவான பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றோம்....
ஐயா வணக்கம்...
கொரோன எனும் கொடிய நோய்க்கிருமி தமிழக மக்களை தோற்று விடாமல் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் எடுக்கும் போர்க்கால நடவடிக்கையை போற்றி மகிழ்கின்றோம். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் மாணவர்கள் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை குறிப்பாக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் அவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்களாக்கி அரசு பொது தேர்வு நடத்திட துணிவுடன் கால அட்டவணையை வெளியிட்ட மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றோம்.
அதுமட்டுமல்ல பள்ளிக்கல்வி மேம்பட பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக சமூக பாதுகாப்போடு தொற்று நோய்க் கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து எப்படி பள்ளியை சிறப்பாக நடத்தலாம் என்பதற்கான வல்லுனர் குழுவை நியமித்து எங்கள் கருத்துக்களையும் கேட்டு எல்லோரும் கல்வி பெற்று சிறப்பாகவும் நோய்நொடியின்றி பத்திரமாக வாழ நல்வழி காட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டு தொகுத்து யாருக்கும் பாதகமில்லாமல் எங்கள் கருத்துக்களை உங்கள் முன் வைக்கின்றோம். அருள்கூர்ந்து பரிசீலித்து சரியான நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டுமென்று அன்போடு வேண்டுகின்றோம்.
1. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சேர்க்கையை நடத்தவும் பழைய கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் கேட்டுப் பெறவும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் வழங்கவும் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனைத்து தனியார் பள்ளிகளையும் திறந்திட தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.
3. ஜூலை மாதம் முதல் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும். அதுவும் இதேபோல் கொரனா தொற்று நோய் கிருமி குறையாமல் இருந்தால் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒருநாளும் மறுநாள் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியை நடத்த அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம்.ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியை நடத்தும் விடுமுறை நாட்களில் அந்த மாணவனுக்கு வீட்டு பாடங்களை வழங்கலாம் அல்லது ஆன்லைன் இணையதளத்தின் மூலம் வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக எந்தவித கட்டணமும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை தருகின்றோம்.
4. முகக் கவசம் கை கவசம் மாணவர்கள் வீட்டில் இருந்து அணிந்து கொண்டு வரலாம். பள்ளியில் நுழைந்தவுடன் சுகாதாரத்துடன் கூடிய சானிடைசர் வழங்கி கை கால்களை கழுவி வைத்து சமூக இடைவெளியுடன் ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை மட்டும் அமரவைத்து கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை செய்யலாம்.
5. பள்ளி வாகனங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை அழைத்து வரும்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கலாம் அதனால் எந்த பிரச்சனையும் வராது. பள்ளி வாகனங்கள் இல்லாத பல பள்ளிகளும் உள்ளது அவர்கள் வழக்கம்போல் பெற்றோர்களே கொண்டுவந்து பள்ளியில் விட்டுச் செல்லலாம் மீண்டும் அழைத்துச் செல்லலாம். அதனால் சுகாதாரம் வழக்கம்போல் பேணி காக்கப்படும். கூடுதலாக பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டால் அதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கின்றோம்.
6.நோய்த் தொற்று கிருமி பாதித்துள்ள மாவட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மிக நன்றாக தெரியும். சிகப்பு மண்டலமா பச்சை மண்டலமா என்பதை முடிவுசெய்து அதற்கேற்றாற்போல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் இன்னும் ஒரு மாதம் தள்ளி கூட பள்ளியை தொடங்கலாம். அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்றபடி முடிவுகள் எடுத்துக் கொள்ளப்படலாம். முடிவுகள் எடுக்கும் முன்பு மாநிலத்தில் உள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு யாரும் பாதிக்காத வண்ணம் எல்லோருக்கும் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வண்ணம் கற்றலுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாணவர்கள் கற்ற அதை மறந்து விடாத வண்ணம் கவனத்தில் கொண்டு பிள்ளைகள் பத்திரமாகவும் பாதுகாப்போடும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
7.விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது எந்த நிலையில் உள்ளது என்பதை பெற்றோர்கள் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் விடுதியின் சுற்றுப்புற சுகாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் ரெசிடென்சியல் ஸ்கூல் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சமூக இடைவெளியோடு படிக்கவும் உண்ணவும் உறங்கவும் வாய்ப்புகளை உறுதிப்படுத்து விட்டு பள்ளியை திறந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
8. குழந்தைகளின் உடல் நிலையை பெற்றோர்கள் முழு பரிசோதனை செய்து எந்த நோயும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு Fit and Fine மருத்துவச் சான்றிதழுடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
9.பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் காய்ச்சல் இருமல் தொண்டை அடைப்பு உள்ளதா என்று 15 நாள்களுக்கு ஒருமுறை பள்ளி நிர்வாகமே மருத்துவ பரிசோதனை செய்து Non Contact Infrared Thermometer கொண்டு பரிசோதித்து பெற்றோர்களுக்கு தகவல் தந்து பாதுகாத்து தரமான கல்வியை உறுதி செய்வோம்
10.திறந்தவெளி விளையாட்டு மைதானம் கலையரங்கம் பெரிய வகுப்பறைகளில் மாணவர்களை சமூக இடைவெளியோடு அமரவைத்து குருகுல முறைப்படி ஆசிரியர்கள் குழுவோடு இணைந்து கற்பித்தலை உறுதி செய்வோம்.
11. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது போல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் பெற்றோர்களின் பெரும் சுமையை குறைக்கும் வகையில் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கும் வகையில் இந்தக் கொடுமையான காலத்தை கவனத்தில் கொண்டு பாடச் சுமையை குறைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
12.. தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு கல்விகட்டணத்தை உயர்த்துவது இல்லை என்று முடிவெடுத்து இருக்கின்றோம். எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளின் வாகனங்களை இந்த ஆண்டு எப்.சி. செய்யாமல் ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை தனி சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்.
13. அனைத்து பள்ளிகளின் அங்கீகாரமும் பழைய அங்கீகார கோப்புகளை கொண்டு மூன்றாண்டுகளுக்கு இயக்குனரகமே அங்கீகார ஆணையை புதுப்பித்து தரவேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
14.தமிழக அரசு கடந்த காலங்களில் நிலவேம்பு கசாயத்தை எப்படி பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார் களோ அதேபோல் கபசுர குடிநீர் அரசே 15 நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்டு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
15. ஒரு வகுப்பில் படிக்கும் மொத்த மாணவர்களை சரிபாதியாக பிரித்து காலை வேளை 8.30 மணிக்கு ஒரு வகுப்பின் பிரிவிற்கும் மதியம் ஒன்றரை மணி முதல் நான்கரை மணி வரை மற்றுமொரு பிரிவினருக்கும் வகுப்பு வாரியாக பாடங்களை கற்பிக்கலாம்.
அதன் மூலம் சமூக இடைவெளி 100% கடைபிடிக்கலாம். காலையில் அழைத்துவரும் மாணவ-மாணவிகளை மீண்டும் மதியம் பன்னிரண்டரை மணிக்கு திருப்பி அனுப்பி அவரவர்கள் வீட்டிலே இறக்கி விட்டு அடுத்த பேட்ச் மாணவர்களை பள்ளி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வரலாம். அதனால் பெற்றோர்களுக்கு பண செலவு குறையும் நாள்தோறும் பள்ளிக்கு வரலாம் பள்ளிக்கு கூடுதலாக பள்ளி வாகனங்களுக்கான செலவை பள்ளியே ஏற்றுக் கொள்ளும்.)
மேற்கண்ட எமது நியாயமான கோரிக்கைகளை வல்லுனர் குழு ஏற்று உரிய ஆணைகளை பிறப்பித்திட வேண்டுமாய் மெத்த பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
கே.ஆர். நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்