தனியாா் பள்ளிகளுக்கும் இலவச பாடநூல் வழங்க வேண்டும். மாநில பொதுச்செயலாளா் கோாிக்கை

தனியாா் பள்ளிகளுக்கும் இலவச பாடநூல் வழங்க வேண்டும். மாநில பொதுச்செயலாளா் கோாிக்கை


ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாடரசு பாடநூல் கழகத்தின் புத்தகங்களை அனைத்து தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும்.


மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். இன்று நமது மாநில சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தினை தங்கள் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கிறேன்.


அனுப்புதல்...
             கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி                     மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். எண்.6.                             ஏகாம்பரம் தெரு சென்னை-75
             கைப்பேசி எண்... 9443964053
             E.mail I'd.. matriculationnews2011@gmail.com


பெறுதல்....
             மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் 
             முதலமைச்சர் அலுவலகம் 
             தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை சென்னை ..9 


வழி..... மாண்புமிகு பள்ளிக் கல்வி இளைஞர் நலன்(ம) விளையாட்டுத்                                    துறை அமைச்சர் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள்.....


மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு.....


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


கொரோனாவை ஒழித்திட தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாய இலவசகல்வி சட்டப்படி 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்த்திட்ட வகையில் 2018.. 19 ..ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கியை இந்தக் கடினமான நேரத்தில் தந்து உதவியதற்காக எங்கள் மாநில சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


அதிலும் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 60 சதவீத கட்டணம் தான் தந்திருக்கிறார்கள். இன்னும் 40 சதவீத கட்டண பாக்கியை அப்படியே நிலுவையில் உள்ளது. அதையும் உடனடியாக தந்து உதவினால்தான் ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் தர முடியும் அதற்காகவாவது நிலுவையில் உள்ள 40 சதவீத கல்வி கட்டண பாக்கியை உடனே தந்து உதவிட வேண்டுமென்று அன்போடு வேண்டுகின்றோம்.


இந்தக் கொடூரமான கொரோனா தொற்று நோய் கிருமி தமிழக மக்களை தொட்டு விடாமல் இருக்க தாங்கள் எடுத்துள்ள முயற்சிகள் ஏராளம். இந்நிலையில் எமது தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் 30 சதவீதத்திற்கு மேற்பட்டோர்  இன்னும் சென்ற ஆண்டிற்கான பழைய  கல்வி கட்டண பாக்கியே செலுத்தவில்லை.


இந்நிலையில் பள்ளியை திறந்த உடனே புதிய புத்தகங்களை வாங்க சொன்னால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்கள். 


எனவே தமிழக அரசே தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தமிழக அரசின் பாடநூல் கழகத்திடமிருந்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு தருவதுபோல் இந்தாண்டு மட்டுமாவது தனியார் பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகத்தை பள்ளி திறந்த உடனே வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் பணிவோடு வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.


தமிழக பள்ளிகல்விக்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் நல்லரசு தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டுள்ள ஏழை பாமர உழைக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தமிழ் பெருங்குடி மாணவ மாணவிகளுக்கு இலவசபாடப் புத்தகங்களை வழங்கி கல்வி சிறந்த தமிழ்நாடாக மாற்றிட இப்பேருதவியை செய்திட வேண்டும் என்று மிகப் பணிவன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.


அனைத்தும் இலவசமாக தந்து காக்கும் தமிழக அரசுக்கு இதனால் பெரும் பணச்சுமையோ பணிச்சுமையோ ஏற்படாது. 


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படித்து வரும்  கோடிக்கணக்கான மாணவர்கள்  மாணவியரின் பெற்றோர்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் என அத்தனை பேரும் தங்களின் பொற்கால ஆட்சிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை இந்த கொரோனா காலத்தில் நீங்கள் செய்த பேருதவியாக கருதி மீண்டும் எடப்பாடியாரின் நல்லாட்சி தொடர நாங்கள் என்றும் துணை நிற்போம் என்று உறுதி கூறுகின்றோம். நன்றியுடன் 


உண்மையுள்ள 
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சென்னை.. 75 நாள் .. 28. 04.2020