தனி மரம் தோப்பாகாது, ஊா் குருவி பருந்தாகாது,உதிாி சங்கங்களே ஒன்று சேருங்கள் உலகை ஆள்வோம் வாருங்கள்
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தலைசிறந்த பள்ளி நிர்வாகிகள் அனைவரும் உங்கள் பகுதியில் பல்வேறு உதவிகளை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செய்துவருவது கண்டும் கேட்டும் பார்த்தும் பிரமித்துப் போயிருக்கிறேன்.
உங்களையெல்லாம் கௌரவிக்கும் விதமாக யாரெல்லாம் நாட்டு மக்களுக்கு நல்ல உதவிகளைச் செய்தவர்கள் நீங்கள் செய்த உதவிகளுக்கான புகைப்பட ஆதாரங்களை உடன் அனுப்பினால் நமது மெட்ரிகுலேஷன் நியூஸ் ஆன்லைன் இதழ் மற்றும் அனைத்து மாவட்ட வாட்ஸ் அப் குழுக்களில் உங்களை பாராட்ட உங்கள் புகழ்பாட விரும்புகின்றோம்.
எனவேஅனைத்து பள்ளி நிர்வாகிகளும் உங்கள் பகுதியில் நீங்கள் செய்த சிறு உதவி ஆனாலும் பெரிய உதவி என்றாலும் அந்த சேவைகளுக்கு ஊக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக ஆதாரத்துடன் புகைப்படத்தை அனுப்பி உதவிட வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.
முதல்வர் நிவாரண நிதிக்கான டி.டி.யை தயாராக வைத்திருக்கக்கூடிய பள்ளி நிர்வாகிகள், சங்க தலைவர்கள் அனைத்தையும் உடனடியாக தொகுத்து மாநில தலைமைக்கு அனுப்ப தயாராகுங்கள்.
ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 3 லட்சம் என்று வரையறுத்துக் கொண்டு அதற்கு மேல் அனுப்பினால் மிகுந்த மகிழ்ச்சியும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். முதல்வரை சந்திக்கும் நாளை நான் உங்களுக்கு அறிவிக்கும் போது நீங்கள் நேரில் வந்தால் போதுமானது.
கடந்த வாரம் நமது மரியாதைக்குரிய பள்ளி கல்வி ஆணையாளர் திருமதி. சுஜி தாமஸ் ஐ.ஏ.எஸ். அவர்கள் என்னோடு அரைமணிநேரம் தொலைபேசியில் அழைத்து நமது கோரிக்கைகள் பிரச்சனைகள் சம்பந்தமாக பேசினார்கள்..... ஆசிரியர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாத சம்பளம் வழங்குவது சம்பந்தமாகவும் நமது பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல் ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் பேசி இருக்கின்றோம். அதன் விளைவாக நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில் நமது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு ஊரடங்கு முடிந்த பின்னால் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழக அரசு தற்போது வழங்குகிறது.மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உங்களுக்குரிய பணத்தை போட தொடங்கி விட்டார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குனரகம் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறது.இந்த வாரத்திற்குள் போடவில்லை என்றால் போராட்டம் அறிவிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம்.....இது சம்பந்தமாக எந்த மாதிரியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று பள்ளி நிர்வாகிகள் உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும். இந்த வாரத்திற்குள் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ.சட்டப்படி உரிய கல்வி கட்டண பாக்கி வழங்கவில்லை என்றால் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை சந்திப்போம்.
தொடக்கக்கல்வித் துறையின் இயலாமையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை.... என்பதை இந்த நேரத்திலே பள்ளிக்கல்வி அமைச்சர் முதன்மை செயலாளர் ஆணையாளர் இயக்குனர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
இனியும் காலம் தாழ்த்தாமல் நலிந்து போயுள்ள நர்சரி பிரைமரி பள்ளிகளை கைதூக்கி விட வேறு வழியே இல்லை..,... என்பதை உணர்ந்து உரிய கல்வி கட்டண பாக்கியை உடனே வங்கியில் செலுத்த வேண்டும் என்று மாநில சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மாநிலம் முழுக்க அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் நமது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இணையதள வழியாக கற்பதும் கற்பிப்பதும் மிகச் சிறப்பாக நடந்துவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
இதேபோல் ஆன்லைன்அட்மிஷன் தொடருங்கள். தனித்தனியாக பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களை சேர்க்கவும் தொடங்கி விடுங்கள்
இல்லை என்றால் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிட்டு விடும் கவனமாக இருங்கள் என்று அன்போடு வேண்டி கேட்டு.. நீங்கள் நலம்பெற வளம்பெற இந்த மாநிலசங்கம் தொடர்ந்து உழைக்கும் என்று உறுதி கூறுகின்றோம்.
யார் எக்கேடு கெட்டால் என்ன என பல பெரிய பள்ளிகள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் ஓரிருவர் இணைந்து மாவட்ட சங்கத்தை துவங்கி மாநில நிர்வாகிகள் என போட்டுக்கொண்டு தனித்தனியாக நம்மைப் பார்த்து நமது செய்திகளை பார்த்து தாங்கள் செய்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி தனித்தனியாக பெயரளவுக்கு செயல்படுவதால் தான் அரசும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நமது கோரிக்கைகளில் செவிசாய்க்காமல் நம்மை ஏமாற்றி வருகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றேன்.
ஏன் இப்படி தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு என்ன வரப்போகிறது... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்.... எந்த பதவி கேட்டாலும்... கொடுக்கத் தயார்
நான் வைப்பதெல்லாம் நமது பள்ளி நிர்வாகிகளுக்கான கோரிக்கைகள் தானே தனித் தனியாக சங்கம் நடத்தி என்ன செய்ய முடியும்..... எங்களிடம் என்ன குறை நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ன பதவி வேண்டும் எடுத்துக்கொள்ளுங்கள் அதை விட்டு தனித்தனியாக சங்கங்கள் நடத்திட வேண்டாம் தயவு செய்து நிறுத்துங்கள் அல்லது நீங்கள் கூப்பிடுங்கள் நாங்கள் வருகிறோம் அல்லது நாங்கள் இருகரம் கூப்பி அழைக்கிறோம்...வாருங்கள்,.
நமது சங்கத்தின் பெயரே தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் என்றுதானே வைத்திருக்கின்றோம். எதற்காக நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தனியாக சங்கம்
நந்தகுமார் சங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே உதவி செய்கிறது என்ற பொய்யான பிரச்சாரத்தை தயவுசெய்து செய்ய வேண்டாம். தனியார் பள்ளிகள் அனைத்தையும் 50 பேராக இருந்தாலும் 5 ஆயிரம் பேராக இருந்தாலும் எல்லாம் தனியார் பள்ளிகள் தான். எல்லோரையும் ஒன்றாக இணைப்பது. ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்று முடிவெடுத்து தானே தனியார் பள்ளிகளின் இயக்குனரகத்தை கொண்டு வந்தோம்.
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் அனைத்து தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து இருக்கின்றோம். 90 சதவிகித தனியார் பள்ளிகளை இந்த மாநில சங்கத்தின் கிழ் கொண்டு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
அதுமட்டுமல்ல அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து ஜாக்டோ-ஜியோ என்றெல்லாம் கூட்டமைப்பை உருவாக்கி அவர்களாலேயே அவர்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற முடியாமல் பின்வாங்கினார்கள். நாம் எம்மாத்திரம் எண்ணிப்பாருங்கள் ஒன்றாக இருந்தால் நன்றாக இருப்போம். முடிவு உங்கள் கையில் வாருங்கள் ஈகோ இல்லாமல் செயல்படுவோம்.. தனி மரம் தோப்பாகாது, ஊா் குருவி பருந்தாகாது,உதிாி சங்கங்கேள ஒன்று சேருங்கள் உலகை ஆள்வோம் வாருங்கள்,
என்றும் கல்வி பணியில் உங்கள்
கே. ஆர். நந்தகுமார்.
மாநில பொதுச்செயலாளர்.