முதல்வா் நிவாரண நிதிக்கு அள்ளி்க் கொடுங்கள்,,,,,,
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பு வணக்கம். நான்தான் உங்கள் நந்தகுமார். நமது மாநில சங்கத்தின் சார்பில் ஒரு மிக முக்கியமான கோரிக்கையை உங்களிடம் வைத்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று Chief Minister public Relief Fund DD/cheque வரும் வாரத்திற்குள் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் அனுப்ப வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் சென்று முதல்வரிடம் நமது சங்கத்தலைவர்களுடன் மாநிலம் முழுக்க வசூல் செய்யும் முதல்வர் நிவாரண நிதி காசோலைகளை நேரில் வழங்கிட திட்டமிட்டுள்ளோம்.
ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது ரூபாய் 3 லட்சம் என்று நிர்ணயித்திருக்
கின்றோம். மாவட்ட தலைவர்கள் சற்று வேகமாக அனைவரையும் கைபேசியில் தொடர்பு கொண்டு உடன் டி.டி.வாங்கி அனுப்ப வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.
அதேபோல் உங்களுக்கு அருகில் உள்ள பள்ளி நிர்வாகிகளை நமது சங்கத்தில் சேர்க்கவும் அவர்களின் கைப்பேசி எண்களை உங்கள் மாவட்ட வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கவும் வேண்டிய முயற்சிகளை உடனே செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.
மீண்டும் நாளை மிகமுக்கியமான செய்திகளோடு உங்கள் இதயத்தோடு பேசிட விரும்புகின்றேன்.
நன்றி வணக்கம்
அன்புடன் உங்கள்
கே,ஆா், நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.