பள்ளி வாகனத்திற்கு தீ வைத்தவா்களை வன்மையாக கண்டிக்கின்றோம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம் .....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆப்பில் இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனத்தை அடையாளம் தெரியாத சமூகவிரோதிகள் நேற்று மதியம் இரண்டு மணிக்கு தீ வைத்து எரித்துள்ளனர். அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஐயா திரு. கந்தசாமி. I.A.S. அவர்களுக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் தனியார் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சண்முகம் சாமுவேல் அவர்களுடன் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றோம்.
இச்சமூக விரோத செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகி திரு. கணேஷ் அவர்களுக்கு இதேபோல் மாற்று வண்டியை தீ வைத்தவர்கள் வாங்கித்தர வேண்டும். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்... என்று மாநில பொதுச்செயலாளர் கே.ஆர் நந்தகுமார்.. மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.