வீட்டிலிருந்து பாடங்கள் படிப்பதற்கு ‘ஆப்’ வசதி!

வீட்டிலிருந்து பாடங்கள் படிப்பதற்கு ‘ஆப்’ வசதி!



கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தொடரும் வகையில், ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயத்தில் சுமார் 100 பள்ளிகள் இந்த ஆப் உடன் இணைந்துள்ளது.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறத்தலால் முடங்கியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க பல விதமான தொழில்நுட்ப வசதிகள் துரிதமாக கொண்டு வரப்பட்டு வருகிறது.

அம்பானியின் பள்ளியில் மெய்நிகர் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைன் வழி கல்வி தொடங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது பள்ளி மாணவர்களும் கற்றல் திறனை தொடரும் வகையில், புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லின்வே டெக்னாலாஜிஸ் (Linway Technologies) என்ற நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. தற்சமயத்துக்கு இந்தியாவில் சுமார் 100 பள்ளிகள் இந்த ஆப் உடன் இணைந்து செயல்படுகிறது.

மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்களுடைய பள்ளியை தேர்வு செய்து விட்டால் போதும். வருகைப்பதிவு, பாடங்கள், புத்தகங்கள் அனைத்தும் ஆப்பில் பெற்று விடலாம். மேலும், பாடத்தை எதுவரையில் படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்ளலாம்.