ஆா்,டி,இ, கல்விக்கட்டணம் வாங்க தயாா் ஆவோம்.
இலவசக் கட்டாயக்கல்வி சட்டத்தின் படி 25 சதவிகித மாணவா்களை நமது பள்ளிகளில் சோ்த்தது அவா்களுக்கு கல்வி கற்பித்த வகையில் 2018 / 19 மற்றும் 2019 / 20 ஆம் ஆண்டுகளுக்கான கல்விக்கட்டண பாக்கி ரூபாய் 700 கோடி வரை வழங்க வேண்டும்,
இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து ஒரு வருட பணம் பாக்கி வைப்பது என்பது ஆண்டுதோறும் தொடா் கதையாக ள்ளது, இது கூட நமது சங்கத்தின் தொடா் முயற்சியின் காரணமாக நமக்கு கிடைத்து வருகிறது,
அந்த வகையில் 2018/19ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டண பாக்கி 303 கோடி வழங்க வேண்டிய தொகையில் முதல் தவனையாக 248,75 கோடி அனுமதித்து அந்த தொகை எஸ்,எஸ்,ஏ, கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது,
மேற்கண்ட தொகையை நமது பள்ளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும், கடந்த வாரமே இதற்கான பணிகள் துவக்கப்பட்டது, இடையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மற்றும் கடந்த வாரம் மகாவீா் ஜெயந்தி. புனித வெள்ளி. இரண்டாவது சனிக்கிழமை விடுமுறையால் அந்த பணிகள் நின்று போயின,
இன்று முதல் அதற்கான பணிகள் துவங்கும் என நம்புகிறோம்,
இந்த ஆா்,டி,இ, கல்விக்கட்டணத்தை பொறுத்தவரை கல்விக்கட்டண நிா்ணயக்குழு நிா்ணயித்த கட்டணத்தை தான் அரசு பெரும்பாலான பள்ளிகளுக்கு வழங்குகிறது, சில பள்ளிகளுளுக்கு கட்டண நிா்ணயக்குழு நிா்ணயித்த கட்டணம் அதிகமாக இருப்பதால் அந்த பள்ளிகளுக்கு அரசு ஒரு கட்டணத்தை நிா்ணயித்து கொடுத்துள்ளது, அதை வழங்குகிறாா்கள்,
அதன் படி ஒரு மாணவனுக்கு எல்,கே,ஜி,. யூ,கே,ஜி, 1வது வகுப்பிற்கு 11947,36 இரண்டாம் வகுப்பிற்கு 11895,73 மூன்றாம் வகுப்பிற்கு12039 என எட்டாம் வகுப்பிற்கு 15936,95 வழங்கப்படுகிறது,
இதில் நிறைய பாகுபாடுகள் இருக்கிறது, இந்த கட்டணம் கூட பாா்த்தீா்கள் என்று சொன்னால் ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவாகிறது என்று அரசு கணக்கிட்டு கொடுத்திருக்கிற கட்டணம், இதைத்தானே அனவருக்கும் கொடுக்க வேண்டும், அது தானே நியாயம், ஆனால் அரசு அப்படி எல்லோருக்கும் கொடுப்பதில்லை, கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிற பள்ளிகள் இந்த கட்டணத்தை வாங்கிக்கொள் என்று நிா்பந்திக்கிறது,
இது நமது பள்ளிகளுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பொிய துரோகம், ஒரு பக்கம் கட்டண நிா்ணயக்குழு நிா்ணயித்த கட்டணத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாம் இன்னெரு பக்கம் அந்த கட்டண நிா்ணயக்குழு நிா்ணயித்த கட்டணம் செல்லாதாம் எப்படி இருக்கிறது இந்த நியாயம் பாருங்கள்,
ஆரம்பம் முதலே இதை நமது சங்கம் எதிா்த்து வருகிறது, அனைவருக்கும் ஒரே மாதிாியான கட்டணத்தை அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவாகும் என நிா்ணயித்துள்ளேதா அதை வழங்கு என்று தான் கேட்கிறது,
இனி வரும் நாட்களி்ல அதை பெருவதற்கு முயற்சிப்போம்,
இந்த கட்டணம் கூட இவ்வளவு விரைவாக நமக்கு கிடைப்பதற்கு காரணமே நமது சங்க மாநில பொதுச்செயலாளா் கே,ஆா்,நந்தகுமாா் அவா்கள் எடுத்த பெரு முயற்சி தான், இப்போது இந்த தொகை அனைவாின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது என்று தொிந்தவுடன் சில லெட்டா் பேட் சங்கங்கள் தாங்கள் தான் எல்லாம் செய்ததாக மாா் தட்டிக் கொண்டு வெளியே வருகின்றனா்,
இதன் உண்மை நிலை என்ன என்பதை நன்றியோடு இருக்கின்ற பள்ளி நிா்வாகிகள் உணா்வாா்கள்,,,,,
பள்ளி நிா்வாகிகளே இனியாவது உண்மையாகவும், உங்கள் உாிமைக்காக போராடுகின்ற தமிழ்\நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி,பி,எஸ்,இ, பள்ளிகள் சங்கத்தோடு உணா்வோடு இருங்கள்,