மாற்று பள்ளிக்கு செல்லும்போது கட்டாயம் மாற்றுச் சான்றிதழ் வாங்க வேண்டும். பொதுச் செயலாளா் வேண்டுகோள்
அனுப்புதல்
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும்
சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்., எண்.6. ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை 600075
பெறுதல்
உயர்திரு முதன்மைச் செயலாளர் அவர்கள்
பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலகம்
தமிழக அரசு chennai-9
பொருள்...,. தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லும்போது கட்டாயம் மாற்றுச் சான்றிதழ் No Due Certificate வாங்கினால்தான் வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட வேண்டி விண்ணப்பம்....,
ஐயா .....,
வணக்கம் தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சில பெற்றோர்கள் பள்ளிக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தாமலேயே மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து விடுகிறார்கள் .
இதனால் பள்ளிக்கு வர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை ஆயிரக்கணக்கில் கட்டாமலேயே சென்றுவிடுகிறார்கள். அதனால் தனியார் பள்ளிகளுக்கு மிகுந்த நஷ்டமும் பணக் கஷ்டமும் ஏற்படுகிறது.
எனவே இந்த கல்வி ஆண்டு முதல் எந்த மாணவனையும் டி.சி. இல்லாமல் எந்தப் பள்ளியிலும் சேர்க்கக்கூடாது. அதேபோல் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் கல்விக்கட்டணம் முழுமையாக கட்டி விட்டார்கள் பாக்கி இல்லை என்பதற்கான நோ டியூ சர்டிபிகேட் No Due Certificate கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் எந்தக் காரணம் கொண்டும் மாணவனின் UDIS No ஐ மாவட்ட வட்ட கல்வி அலுவலகங்களில் தரக்கூடாது. அதை வைத்துக்கொண்டு மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க கூடாது என்று அரசாணை வெளியிட வேண்டும் அப்பொழுதுதான் அரசையும் தனியார் பள்ளிகளையும் யாரும் ஏமாற்ற முடியாது.
இல்லையென்றால் தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவார்கள். என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் மாபெரும் நஷ்டத்தில் பள்ளிகளை நடத்த முடியாமல் லட்சக் கணக்கில் கடன் வாங்கியும் வாங்கிய கடனுக்கு மனைவியின் தாலியை அடகு வைத்து வட்டி கூட கட்ட முடியாமல் போலி கௌரவத்திற்காக பள்ளிகளை நடத்தி வருகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
எனவே தனியார் பள்ளிகளின் உண்மையான நிலையை மனதில் கொண்டு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்த மாணவனையும் வேறு பள்ளிகளில் சேர்க்கை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பல முறை நேரிலும் கோரிக்கை வாயிலாகவும் அரசுக்கு பல ஆண்டுகளாக தெரிவித்துள்ளோம்.
இந்த ஆண்டு நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் 2020 ஆம் கல்வியாண்டில் புதியதாக துவங்கும் எந்த தனியார் பள்ளிக்கும் துவக்க அனுமதி தரக்கூடாது. இன்னும் ஐந்தாண்டுகளுக்கு புதிய பள்ளிகள் தொடங்குவதை தடை செய்திட வேண்டும். அப்போதுதான் இருக்கிற பள்ளிகள் மென்மேலும் சிறப்பாக வளர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அரசு பள்ளிகளிலும்
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். எனவே தயவு செய்து புதிய பள்ளிகளுக்கு எந்த பெயரிலும் துவக்கஅங்கீகாரம் தராமல் தடை செய்திட வேண்டும்.... என்றும் பணிவோடு வேண்டுகின்றோம்.
நன்றியுடன்...
உண்மையுள்ள
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர் சென்னை 08.04.2020
நகல்.....
உயர்திரு .பள்ளிக்கல்வி துறை ஆணையாளர் அவர்கள்.
உயர்திரு .பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள்
உயர்திரு .தனியார் பள்ளிகள் இயக்குனர் அவர்கள்.
கல்லூரி சாலை சென்னை-6