கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? உயர்கல்வி துறை விளக்கம்!

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? உயர்கல்வி துறை விளக்கம்!


தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஒவ்வொரு பல்கலைக்கழகளாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் செஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து உயர்கல்வி விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் 17.3.2020 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும், கல்லூரிகள் துவங்கும் அடுத்த பருவம் / செஸ்டரின் துவக்கத்தில் தேர்வகள் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்.