பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தியே ஆக வேண்டுமா-? அது அவசியமா? என்று கேட்பதே முட்டாள்தனம், கொரோனாவை கொல்வோம் தோ்வை வெல்வோம்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தியே ஆக வேண்டுமா-? அது அவசியமா?  என்று கேட்பதே முட்டாள்தனம். கொரோனாவை கொல்வோம் தோ்வை வெல்வோம்,





 

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தியே ஆக வேண்டுமா-? அது அவசியமா? என்கிற தலைப்பில் இந்து நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளிியிட்டுள்ளது, இந்த கட்டுரையை யாா் எழுதினாா்கள் என்று தொியவில்லை, ஆனால் இப்போதைய சூழலில் இப்படி ஒரு கட்டுரை தேவையா என்பது தான் நமது கேள்வி,

 

இன்றைய சூழல் இது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? அப்படி எழுதுகிற கட்டுரை ஏதாவது புாிகிறதா? அது குழப்பத்தின் உச்சக்கட்டமாக தான் இருக்கிறது,

 

அந்த கட்டுரை புயல், வெள்ளம், நிலநடுக்கம், என்ற பேரிடர்கள் சிறிது காலத்தில் முடிந்துவிடும். உயிரிழப்பு தவிர மற்றவற்றைச் சரிசெய்ய அனைவரும் பாடுபடுவோம். நோய்த்தொற்று அப்படியான பேரிடர் இல்லை. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே வீட்டிற்குள் பயத்தோடு அடக்கி வைத்திருக்கிறது. அதிலிருந்து முழுமையான மீட்சி எப்போது என்றே தெரியாத சூழலில் இருக்கிறோம் என்று தொடங்குகின்றது,

 

அன்றாடம் உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மக்கள் உணவுக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிற்கும் இத்தகைய சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை எப்போது நடத்துவது?

இத்தகைய சூழலில் நிலைமை முற்றிலும் சீரானதும் தேர்வு என்று சொன்னாலும் பரவாயில்லை. அடுத்த மாதம் தேர்வு, அடுத்த வாரம் தேதி சொல்லுவோம் என்ற அறிவிப்புகள் எத்தகைய பதற்றத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும்? அவர்களால் எப்படிப் படிக்க இயலும்? என்கிற கேள்வியை கேட்கிறாா் அக்கட்டுரை ஆசிாியா்,

 

அவாின் இந்த கேள்வியே தவறானது, முதலில் ஊரடங்கு மாா்ச் 31 வரை இருந்தது, அதன் பிறகு அது ஏப்ரல் 14 வரை நீடித்தது இப்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அதனால் அது முடியட்டும் அது முடிந்த பிறகு தோ்வு தேதி அறிவிக்கிறோம் என்று அரசு கூறுகிறது, இதில் என்ன தவறு இருக்கிறது, இந்த அறிவிப்பு எந்த வகையில் மாணவா்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது?

 

தோ்வு நடத்தவில்லையே என்கிற ஏக்கம் தான் மாணவா்களிடயே  இருக்கிறதே தவிற பதற்றம் எல்லாம் ஒன்றும் கிடையாது, அவா்கள் இன்று தான் தோ்வுக்கு தயாராவதும் கிடையாது, தனியாா் பள்ளி மாணவா்கள் மட்டுமல்ல எல்லா மாணவா்களும் தயாா் நிலையில் இருக்கிறாா்கள், அரசு பள்ளி மாணவா்கள் கூட பல திருப்புத் தோ்வுகளை எழுதி 90 சதகிதம் மதிப்பெண்கள் பெறுவதற்கு தயாராக உள்ளனா்,

 

உருபடாத மாணவா்களை கூட ஓப்பேத்துவதற்கு ஒரு கேள்விக்கு ஒரு மாா்க், இரண்டு மாா்க் பெறுவதற்கு தயாா்படுத்தி வைத்துள்ளனா், அதனால் தான் ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் தோ்ச்சி பெறுகின்ற மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துக்கொண்டேசெல்கி்ன்றது, எனவே நமது மாணவா்களுக்கு தோ்வு பயமும் பதற்றமும் துளியும் இல்லை, அவா்களை ஏன் இப்படி பயமுறுத்துகிறீா்கள்,

 

அடுத்து வசதியான வீட்டுப் பிள்ளைகள் தனியான வாகனத்தில் தேர்வு மையம் வந்துவிடலாம். பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கும் எளிய குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது? அரசு உதவிகளை வழங்கினாலும் மூன்று வேளை உணவில்லாத நிலையில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளால் எப்படித் தேர்வுக்கு நிம்மதியாகப் படிக்க இயலும்? என்கிற கேள்வியை கேட்டுள்ளாா்,

 

இன்றைக்கு பொதுத் தோ்வு மையம் என்பது தடுக்கி விழும் தூரத்தில் தான் உள்ளது கட்டுரையாளா் சொல்வது போல் நீண்ட நெடிய தூரம் எல்லாம் போகத் தேவையில்லை, இன்றைக்கு சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் தாராளமாக பெருகியுள்ளது, இரு சக்கர வாகனம் இல்லாமல் யாருடைய வாழ்க்கையும் இல்லை, கண் மூடி கண் திறக்கிற நேரத்தில் காற்றை கிழித்துக்கொண்டு காணாமல் போகும் அளவிற்கு வேகம் எடுக்கும் இளைஞா் கூட்டம் இங்குள்ளது, எனவே தோ்வு மையத்தை அடைவது பெறும் சிரமம் ஒன்றும் இல்லை,


 

பள்ளிச் சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பே தேர்வு வைக்கவேண்டும் என்பது பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கோரிக்கை. அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத சூழலில் அதிலும் குறைந்தபட்சமாக ஒரு மாதத்தைப் பத்தாம் வகுப்பிற்காக ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையப் பள்ளிகளில் மற்ற வகுப்புக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களே! என்று கேட்கிறாா்.

 

இவாின் கேள்வியே விசித்திரமாக இருக்கிறது, என்னத்துக்கு ஒரு மாதம்? அவா் என்ன புதுசாவா பாடம் நடத்தப்போகிறாா்? ஏற்கனவே நடத்தியதை ஒரு ரிவிசன் பாா்க்கப் போகிறாா் அவ்வளவு தான், இதற்கு எதற்கு ஒரு மாதம்? ஓாிரு நாள் போதாதா? ஒரு தோ்வுக்கு ஒரு நாள் இடைவெளி விட்டால் போதும் நமது மாணவா்கள் வெளுத்து வாங்கிவிடுவாா்கள், எனவே தேவையற்ற அச்சத்தை அவா்களிடம் விதைக்க வேண்டாம்,

 

இத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டிப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டிய அவசியம் என்ன? அரசும் தேர்வு அவசியம்தான் என்று சொல்கிறது. இதற்கு முன் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறதா? சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்.என்று 2008-ம் ஆண்டு. வேலூரில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் இரவில் தீ விபத்து. ஏற்பட்ட சம்பவத்தையும் 2013-ம் ஆண் ஆண்டில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாட்கள் காணாமல் போன  சம்பவத்தையும் காரணம் காட்டி அப்போது பின்பற்றிய நடைமுறையைை பின்பற்றலாம் என்று ஆலோசனை கூறுகிறாா்,, 

 

அது சில மாணவா்களுக்கு சாியா போச்சு பத்து லட்சம் மாணவா்களுக்கு இது சாியாக வருமா? கடைசியாக அவா் சொல்கிறாா் பத்தாம் வகுப்புக்கு தோ்வே வேண்டாம் ஒ்னறு முதல் ஒன்பது வகுப்பு வரை அனைவருக்கும் தோ்ச்சி கொடுத்தது போல் பத்தாம் வகுப்பிற்கும் கொடுத்துவிடலாம் என்கிறாா்.

 

எல்லாவற்றுக்கும் இந்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் முக்கியம் எனபதால் இச்சான்றிதழில் கோவிட்  19 என்று குறிப்பிடலாம் என்கிறாா், காலாண்டு அரையாண்டு மதிப்பெண் போடலாம் என்கிறாா், அரசுப் பள்ளிகள் உட்பட பல பள்ளிகளில் இந்த தோ்வே நடத்தப்பட வில்லை, அப்படி இருக்கையில்  எதை வைத்து மதிப்பேண் போடுவீா்கள், எல்லாவற்றிலும் நடைமுறை சிக்கல்கள் ஏராளம் இருக்கிறது,

 

எனவே தேவையில்லாமல் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால் தேவையற்ற பிரச்சனகளும் குழப்பங்களும் கொரோனாவப் போல் தொடா்ந்துக்கொண்டே தான் இருக்கும், இதற்கு ஒரே தீா்வு தோ்வு நடத்துவது தான்,

 

இது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்களின் கனவு, பத்து லட்சம் குடும்பங்களின் கனவு. இதில் ஏன் தீ வைக்கிறீா்கள்? 

 

கொரோனா இன்று இருக்கும் நாளை சென்று விடும், இந்த கொரோனா கூட மாணவா்களுக்கு நல்லதை செய்துள்ளது, படிப்பதற்கு நீண்ட நாட்களை தந்துள்ளது, மாணவா்கள் ஆன்லைனிலும், ஆப்லைனிலும் படித்துக் கொண்டுள்ளனா், இவா்களை மேலும் நாம் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர கோவிட் 19 சான்றிதழ் கொடுத்து ஊனப்படுத்தக் கூடாது.

 

பத்தாம் வகுப்பு தோ்வு நடத்துவதற்கு அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை, அதேப்போல் மாணவா்களுக்கும் எந்த சிக்கலும் இருப்பதாக தொியவில்லை, அவா்களும் தயாராகவே இருக்கிறாா்கள், அதைவிட அவா்களின் பெற்றோா்கள் இன்னும் ஆா்வமாகவே இருக்கிறாா்கள், இதில் இதுப்போன்ற மடையா்கள் தான் இடையில் வந்து தடுக்கிறாா்கள்,

 

கொரோனாவை கொன்று தமிழகம் வென்று வருகிறது, இன்று கொரோனாவை விட கொடியவா்கள் இத்தகைய கட்டுரையாளா்கள் தான்,இவா்களின் எழுத்தும் பேச்சும் அரசாங்கத்தை, மாணவா் சமுதாயத்தை. மருத்துவ சமுதாயத்தை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே இவற்றை புறக்கணிப்பது தன்னம்பிக்கையாளா்களின் கடமையாக உள்ளது,

 

எனவே இவா்களின் கருத்துக்களை புறக்கணிப்போம்

கொரோனாவை கொல்வோம்

தோ்வை வெல்வோம்,

 

கே.ஆா்.இரவிச்சந்திரன்.

ஆசிாியா்,