சொத்து வாிக்கு விலக்கு தமிழக அரசு அரசாணை

சொத்து வாிக்கு விலக்கு தமிழக அரசு அரசாணை



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளிகள் சொத்து வரி கட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருக்கின்றோம். 


சொத்து வரி கட்டச் சொல்லி அதிகாரிகளின் தொல்லை தாங்காமல் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகி பல பள்ளி நிர்வாகிகள் பயந்து இலட்சக்கணக்கில் பணத்தையும் கட்டி விட்டார்கள். நான் பலமுறை சொன்னோம் கட்ட வேண்டாம் பொறுத்திருங்கள் என்று கொரோனா நோய் தொற்று நம்மை அழித்து விட்டு விடாமல் இருக்க விடப்பட்டுள்ள விடுமுறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அனுப்பி 3 மாதம் காலஅவகாசம் கேட்டு.... பெற்றுள்ள சொத்து வரி கட்டாமல் இருப்பதற்கான அரசாணையை தங்களின் பார்வைக்கு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கின்றோம். 


இந்நிலையில் உச்ச நீதிமன்றம் திறந்த உடனே அதற்கான தடை உத்தரவை பெற்று நிரந்தரமாக சொத்து வரி கட்டாமல் ......நமது சங்கம் உங்களை பாதுகாக்கும் நம் சங்கத்தில் யாரெல்லாம் உறுப்பினராக பதிவு செய்து சொத்து வரி கட்டாமல் இருக்க தங்கள் சொத்து வரி கேட்பானையை நமது மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நிச்சயம் விதிவிலக்காணை அனுப்பி வைப்போம். 


அன்புடன் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்.