கோபி ஸ்ரீ வித்யாலயா பள்ளியின் தன்னாா்வ பணி
கொரோனா வைரஸ் தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 103 குடும்பத்தினருக்கு கோபிசெட்டிபாளையம்வருவாய் துறையின் வேண்டுகோளை ஏற்று தன்னார்வலர்கள் சார்பாகவும் கோபி ஸ்ரீ வித்யாலயா பள்ளி தாளாளர் திருமதி பூங்கோதை, ஸ்ரீதர், கீத்தா ரவிந்தரன் மற்றும் நித்தியா கைலாஸ் அவர்களின் சார்பாகவும் மேற்படியார்களின் முன்னிலையில் 103 குடும்பங்களின் கிராமத்திற்கே சென்று ஒரு மாதத்திற்கான அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டமைக்கு வருவாய் துறையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் தங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்