தனியாா் பள்ளிகள் திறக்க அனுமதிக்க வேண்டும்
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 31 நாட்களாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் கல்லூாிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, பொதுத் தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, ஊரடங்கும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இன்னும் மேலும் நீளும் என்றும் கூறப்படுகிறது, இதனால் பள்ளிகள் திறப்பும் மேலும் தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகின்றது, இதனால் பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருங்குழப்பம் நீடித்து வருகிறது, இதனால் தனியாா் பள்ளி நிாவாகிகள் பெறுமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா், மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்,
மே மாதமும் இதே நிலை நீடித்ததால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் நிறைய பாதிப்புகளை சந்திக்க நோிடும், எனவே இந்த பாதிப்புகளை சாி செய்ய மே மாதம் 4 ஆம் தேதி முதல் தனியாா் பள்ளி அலுவலகங்களை திறந்து ஆயத்த பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நமது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் கே,ஆா், நந்தகுமாா் தமிழக அரசுக்கு கோாிக்கை வைத்துள்ளாா்,
கொரோனா என்னும் ஆட்கொல்லி நோய் உலகையே அச்சிருத்திக்கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசும் தமிழக அரசும் அதனை எதிா்தது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அரசின் இந்த சீாிய முயற்சிக்கு தமிழகம் முழுவதும்உள்ள 20.000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன,
இதன் விளைவாக நாட்டிாகொரோனாக்ெநாளுக்கு நாள் குறைந்து வருகின்றது, இருந்தாலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்கிற வதந்திகள் பரவி வருகின்றது, அப்படி ஒரு நிலை வந்தால் தனியாா் பள்ளி அலுவலகங்கள் மட்டும் திறந்து ஒருசில பணியாளா்களை வைத்து பொதுத் தோ்வு பணிகளை மேற்கொள்ளவும். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தவும். வண்ணமடித்தல் மற்றும் மாணவா்களுக்கான இருக்கைகள் தயாா் செய்தல்உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்,