நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் ஆா்,டி,இ, பணம் போடவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.

நா்சாி பிரைமாி பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் ஆா்,டி,இ, பணம் போடவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.


நமது சங்கத்தின் தொடா் முயற்சிகளுக்கு பிறகு முதற்கட்டமாக ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழக அரசு தற்போது வழங்குகிறது.மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அவா்களுக்குரிய பணத்தை போட தொடங்கி விட்டார்கள்.


ஆனால் தொடக்கக் கல்வி இயக்குனரகம் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறது.இந்த வாரத்திற்குள் போடவில்லை என்றால் போராட்டம் அறிவிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம்.....இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்,


இது சம்பந்தமாக எந்த மாதிரியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று பள்ளி நிர்வாகிகள் உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும். இந்த வாரத்திற்குள் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ.சட்டப்படி உரிய கல்வி கட்டண பாக்கி வழங்கவில்லை என்றால் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை சந்திப்போம்.


தொடக்கக்கல்வித் துறையின் இயலாமையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை.... என்பதை இந்த நேரத்திலே பள்ளிக்கல்வி அமைச்சர் முதன்மை செயலாளர் ஆணையாளர் இயக்குனர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.


இனியும் காலம் தாழ்த்தாமல் நலிந்து போயுள்ள நர்சரி பிரைமரி பள்ளிகளை கைதூக்கி விட வேறு வழியே இல்லை..,... என்பதை உணர்ந்து  உரிய கல்வி கட்டண பாக்கியை உடனே வங்கியில் செலுத்த வேண்டும் என்று மாநில சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


கே,ஆா், நந்தகுமாா், மாநில பொதுச்செயலாளா்.