ஒத்திவைக்கப்பட்ட எஸ்எஸ்சி தேர்வுகள் அடுத்து எப்போது நடைபெறும் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்எஸ்சி தேர்வுகள் அடுத்து எப்போது நடைபெறும் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (Staff Selection Commission SSC) 12ம் வகுப்பு தகுதி அளவிலான CHSL தேர்வுகள், இளநிலை பொறியாளர் தேர்வு, குரூப் சி மற்றும் டி உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகளை அறிவித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.


இதனிடையே, கொரோனா வைரஸ் பரவைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மேற்கண்ட எஸ்.எஸ்.சி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்ததாக SSC தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து உயர்மட்டக் குழுவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில், ஊரடங்கு முடிந்த பிறகு, அதாவது மே 3 ஆம் தேதி, எஸ்எஸ்சி தேர்வு தேதி குறித்த விவரங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ என்னும் பக்கத்தைக் காணலாம்.