ஆங்கிலத்தில் பேச இந்த 5 வழிகள் போதும்,,,!
30 நாட்களில் இங்கிலீஷ் பேசிவிடலாம், ஒரே வாரத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் என பலதரப்பட்ட விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், ஆங்கிலம் என்பது இன்னொரு மொழி.
நாம் அன்றாட இயல்பு வாழ்வில் இருக்கும் போது, அதனை கற்பதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். இருப்பினும் ஆங்கிலம் கற்பதற்கு அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம், முயற்சி, பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரளவு சரளமாக பேசவும், எழுதவும் முடியும். அந்த வகையில், ஆங்கிலம் கற்பதில் என்ன குறைபாடு, ஆங்கிலத்தில் எழுத தெரிந்த அளவிற்கு பேச முடியாமல் போவதற்கு என்ன காரணம், இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக பள்ளிப்பருவத்தில் இருந்தே நாம் ஆங்கிலம் படித்து வருகிறோம். இருந்தாலும் இப்போதும் ஆங்கிலத்தில் பேச சொன்னால் நடுங்கி போய்விடுகிறார்கள். அதற்கு காரணம் நாம் படித்தவைகள் அனைத்தும் ஏட்டு அளவில் மட்டுமே. அவை நடைமுறைக்கு வரும் போது சிக்கலாகிறது.
ஆங்கிலத்தை நான்கு விதமாக வரையறுக்கலாம். அவை Reading, Writing, Speaking, Listening ஆகும். நம்மில் பெரும்பாலோனார் இவற்றில் Reading, Writing மட்டுமே பள்ளிகளில் இருந்து படித்து வந்திருப்பார்கள். மதிப்பெண் பெறுவதற்கு இது போதும் என்பதால், ஆங்கிலத்தில் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் மட்டுமே பழகியிருப்பார்கள். அதை தவிர Speaking, Listening ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்க மாட்டார்கள். அதாவது ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதற்கோ, மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசினால் அதனை கவனிப்பதற்கோ நாட்டம் இல்லாமல் இருந்திருப்பார்கள். இதுவே ஆங்கிலம் பேச முடியாமல் போனதற்கு முதற் காரணம் ஆகும்.
உங்களைச் சுற்றி ஆங்கில மொழி இருக்க வேண்டும். ஆங்கிலம் பேசும் நபர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கமோ, கூச்சமோ படக்கூடாது. ஏனென்றால், நீங்கள் பயிற்சி நிலையில் தான் உள்ளீர்கள். அதனால், இங்கிலீஷ் பேசும் போது தவறுகள் ஏற்படுவது சகஜம். அதனை திருத்திக் கொள்ள வேண்டும். அது போதும்.
அதே போல், ஏற்கனவே கூறியபடி Speaking, Listening ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆங்கில புத்தகம், நாளிதழ்களை படிக்கலாம். ஆனால், படிப்பதை உரக்க படிக்க வேண்டும். அப்போது தான் உச்சரிப்பு சரியாக இருக்கும்
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை அழகாக எழுதிவிடுவோம். அதன் ஸ்பெல்லிங் நமக்கு தெரியும். எனவே, எழுதுவதில் எந்த சிக்கல்களும் இல்லை. ஆனால், உச்சரிப்பு என்பது நமக்கு தெரியாது. அதை சொல்லி கொடுக்கவும் ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் இல்லை. இப்படியான சூழலில் உங்களுக்கு எந்த வார்த்தை தெரியவில்லையோ அதனை கூகுளில் டைப் செய்து பார்க்கவும். அப்போது அந்த வார்த்தைக்கான உச்சரிப்பு கிடைக்கும். குறைந்தது மூன்று முறை அதே உச்சரிப்பில் நீங்களும் அந்த வார்த்தையை உரக்க பேச வேண்டும்.
Times Now, Mirror Now, Movies Now போன்ற ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கலாம். அதே நேரத்தில் பார்த்து விட்டு அப்படியே சென்று விடக்கூடாது. அவர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதை கவனித்து அதன்படி நீங்கள் பேசி பார்க்க வேண்டும்.
ஆல் இந்தியா ரேடியோ ஆன்லைனில் கேட்கலாம். அதில் ஆங்கில செய்திகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில திரைப்படங்களில் ஒவ்வொரு வசனமும் எப்படி இருக்கிறது, ஒருவர் மற்றொருவரிடம் எப்படி பேசுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 ஆங்கில படங்கள் பார்த்து, பயிற்சி பெற்றால், ஒரே வாரத்தில் ஓரளவு ஆங்கிலம் பேசிவிடலாம்.
ஆங்கிலம் பேச முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நாம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததால் தான். எனவே, கொஞ்சம் கூட கூச்சப்படாமல், வீட்டில் நல்ல உரக்க பேசுங்கள். வீட்டில் பேச முடியவில்லை என்றால், பூங்கா போன்ற இடங்களில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய், உரக்க பேசுங்கள். கற்பதை விட அதை பின்பற்றுவது மிகமிக முக்கியம்.
நாமு்ம் ஆங்கில வாழிப் பள்ளிகளை நடத்துகிறோ்ம, நம்மி்ல் எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தொியும், நமது மாணவா்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறாா்களா? எல்லாேரும் பேசும் போது நம்மால் ஏன் முடியாது? நீங்க்ள கொஞ்சம் முயற்சித்தால் எல்லோரையும் பேச வைத்துவிடலாம்,
உங்கள் பள்ளி ஆசிாியா்கள் மாணவா்கள் என எல்லோருக்கும் எளிதான பயிற்சி தரலாம், இது இல்லை என்று தானே பல மாணவா்கள் வேறு பள்ளியை நாடி போகிறாா்கள், அந்த குறையை இனி நாம் நிவா்த்தி செய்வோம்,