பள்ளிகளின் பாதுகாப்பில் 30 ஆண்டுகள்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடர்பாடுகளுக் கிடையில் .....தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் என்கிற அமைப்பை தொடங்கி இந்த சங்கத்திற்காக மெட்ரிகுலேஷன் நியூஸ் என்கிற பத்திரிகையை நடத்தி பள்ளி நிர்வாகிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தார்களோ இல்லையோ அனைவருக்கும் அந்த பத்திரிக்கையை அனுப்பி நானாகவே ஆங்காங்கு கூட்டங்களை மாவட்டம் தோறும் சென்று நடத்தி இன்றைக்கு மாநிலம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பள்ளி நிர்வாகிகளை என் உற்றார் உறவினர்களை நண்பர்களை என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களை நான் பெற்றிருக்கிறேன்.... என்று சொன்னால் மிகையாகாது.
எத்தனையோ பெரிய பள்ளிகள் எல்லாம் ஏளனம் செய்த போதும் தனித்தனியாக சங்கம் அமைத்து நம்மையெல்லாம் நசுக்க பார்த்தபோதும் நமது அமைப்பு யாருக்கும் பயப்படாமல் சற்றும் தொய்வில்லாமல் எதற்கும் கவலைப்படாமல் சாதி மத இனமொழி கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த சங்கத்தை வழிநடத்தி நாளும் போராட்டம் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் வழக்குகள் என்று எத்தனையோ அனுபவங்கள்.... அத்தனையும் மீறி இந்த சங்கம் பீடு நடை போட்டு முன்னேறித்தான் வந்திருக்கிறது.
இன்றைக்கும் எத்தனையோ சிறுசிறு சங்கங்களாக ஒருசிலர் நடத்தி வந்தாலும் இன்றைக்கு 90 சதவீத தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து விட்டோம்.அந்த 10% பேரையும் எந்த பாகுபாடும் இல்லாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருங்கிணைத்து
ஒரே சங்கமாக தனியார் பள்ளிகளின் உரிமைக்குரலாக ஓலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நான் யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை யார் மீதும் வெறுப்பும் கொள்வதில்லை. வாழ்கிற காலம் கொஞ்சம் ஆனாலும் வரும் தலைமுறையும் நம்மை வாழ்த்த வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்பது என்று முடிவு செய்து இருக்கின்றோம்.
தமிழகம் முழுக்க 1500 தலைவர்களைக் கொண்ட ஒரு மாபெரும் அமைப்பு 37 மாவட்டங்களிலும் இந்த சங்கத்தின் நிர்வாகிகள் அதற்கான 37 வாட்ஸ்அப் குழுக்கள் வாய்ஸ் மெயில் ஈமெயில் ட்விட்டர் யூடியூப் என்று இந்த சங்கத்தை டெக்னாலஜிகலி டெவலப்மென்ட் அசோசியேசன் ஆக மாற்றியிருக்கிறோம்.
அதன் விளைவாக நீங்கள் உறுப்பினரோ இல்லையோ. பெரிய பள்ளியோ சிறிய பள்ளியோ. இந்த சங்கத்தில் உங்களுக்கு விருப்பமோ இல்லையோ தெரியாது.
எனக்கு கிடைத்த தகவலின் படி நீங்கள் கொடுத்த கைபேசி எண்களை அது உங்கள் கைபேசியாக இருக்கலாம் .உங்கள் உதவியாளரின் கைபேசியாக கூட இருக்கலாம்.
அதை எல்லாம் தொகுத்து இதுபோன்ற வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து சங்கத்தை மேம்படுத்துவது .நமது பிரச்சனைகளை சொல்லி நமது ஒற்றுமையை பலப்படுத்திட முடிவெடுத்து இருக்கும்போது உங்களுக்கு அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தர மாட்டோம் ...
சங்க செய்திகள். கல்வி செய்திகள் அரசாணைகள் கற்பித்தல் முறைகள் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கும் பள்ளிகளுக்கும் பாலமாக இருந்து அனைவருக்கும் தரமானகல்வி தந்து பாரத திருநாட்டை பார் போற்றும் அளவுக்கு முன்னெடுத்துச் செல்வது.
தனியார்பள்ளிகளின் நிர்வாகிகளின் செல்வத்தையும் செல்வாக்கையும் உயர்த்துவது ஒன்றே லட்சியமாககொண்டு இந்த வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து இருக்கிறோம்.
இந்த வாட்ஸப் குழுவில் உங்களுக்கு நிச்சயம் பயன் கிடைக்கும். உங்கள் நியாயமான கருத்துக்களை இதில் பதிவு செய்யலாயார் மனமும் புண்படக் கூடாது .இது முழுக்க கல்வி சார்ந்தது. தனியார் பள்ளிகளின் நலன் சார்ந்து சங்கத்தின் வளர்ச்சியை சார்ந்து இருக்க வேண்டும்.
இதுவெல்லாம் எனக்கு தேவையில்லை நீங்களே எக்கேடோ கெட்டுப் போங்கள் எனக்கென்ன நானாட்சி என் பள்ளியாட்சி என்று நினைக்கிறவர்கள்..... தயவுசெய்து நீங்களே விலகிக் கொள்ளுங்கள்.
இல்லை நான் நல்லவன் இந்த சங்கத்திற்கும் இச்சமுதாயத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லக் கூடியவர்கள் இந்த சங்கத்தில் என்ன மாதிரி பதவி வேண்டுமானாலும் கேளுங்கள் வழங்குவதற்கு நாங்கள் தயார் எடுத்து செய்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களின் பள்ளிகளின் பெயர்களையும் பதிவு செய்யுங்கள் அவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராகி அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து எல்லா கோரிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பாக நீங்களும் ஒரு கருவியாக இருந்து உதவிட வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன்.
நான் வேறு சங்கம் என் கொள்கைகள் வேறு என்று நினைப்பவர்கள் இந்த சங்கத்தின் செயல்பாடுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை. என்னிடம் பணம் இருக்கிறது நான் பெரிய பள்ளி எனக்கு யார் தயவும் தேவையில்லை. என்று நினைப்பவர்கள் தாராளமாக நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து விலகிக் கொள்ளலாம். நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை.
ஒன்று மட்டும் உறுதி. இந்த சங்கத்தை பகைத்துக்கொண்டு யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.இந்த சங்கத்தை பகைத்துக்கொண்டு போனவர்கள் போன இடமெல்லாம் இன்றைக்கு புல் முளைத்திருக்கிறது.
தனிமரம் தோப்பாகாது தங்கம் செய்யாததை இந்த சங்கம் செய்யும் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது மட்டும் நீங்கள் மறந்துவிட வேண்டாம்,
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.