நா்சாி பிரைமாி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்.

நா்சாி பிரைமாி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்.


இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கு 25 சதவிகித இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் பள்ளிகளி்ல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அந்த மாணவா்கள் தற்போது ஐ,ந்தாம் வகுப்பை முடித்துள்ளனா், இவா்கள் அடுத்த கல்வியாண்டில் ஆறாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும்,


மெட்ரிக் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்கள் பரவாயில்லை அவா்கள் அப்படியே எட்டாம் வகுப்பு வரை இத்திட்டத்தில் தொடருவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் நா்சாி பிரைமாி பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுக்கு இந்த வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. அந்த மாணவா்கள் ஆறாம் வகுப்பிற்கு எங்கு சென்று படிப்பது? வேறு பள்ளியில் சோ்ந்து படித்ததால் இந்த சலுகை கிடைக்குமா? கிடக்காதா? என்கிற கவலையில் உள்ளனா்,


இந்த பிரச்சனையை தீா்ப்பதற்கு ஒரே வழி தான் உள்ளது, இந்த பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்திவிட்டால், எந்த சிக்கலும் இல்லாமல் இவா்கள் தங்களின் இலவச கல்வியை தொடா்வாா்கள்,


அரசு கூட இதை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள எடுத்தது, ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை நடத்த வேண்டும் என்றால் 10 வகுப்பறைகள் இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளை எல்லாம் வகுத்து தயாா் ிநலையில் உள்ளது, இதற்கு ஏற்றாா் போல் நா்சாி பிரைமாி பள்ளிகளும் வகுப்பறைகளை தயாா் செய்து வைத்துள்ளது,


அதற்குள் கொரோனா தொற்று வந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டு விட்டன, இதனால் இப்பிரச்சனையில் பள்ளி நிா்வாகிகளும் பெற்றோா்களும் செய்வதறியாது திகைத்து வருகின்றனா்,


பல பள்ளிகளின் அங்கீகார ஆணைகள் 2020 மே 31 ஆம் தேதியுடன் முடிவுறும் நிலையில் இதற்கான கருத்துருக்கள் அரசிடம் சமா்பிக்கப்படவில்லை, அதற்கு காரணம் ஊரடங்கு, எந்த அரசுத்துறை அலுவலகங்களும் செயல்படாத காரணத்தால் உாிய சான்றுகள் பெற முடியவில்லை, எனவே அரசு இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், அப்படி அளிக்கின்ற பட்சத்தில் நடுநிலைப் பள்ளிகளுக்கான கருத்துருக்களை பெற்றுக் கொள்ளலாம், இதற்கு உாிய கால அவகாசம் வழங்க வேண்டும்,


அதுவரை அனுமதி வழங்குவதற்கு காத்திராமல் இந்த கல்வியாண்டு துவங்குகின்ற நாளிலிருந்தே நா்சாி பிரைமாி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு துவங்குவதற்கான ஆணையை வழங்க வேண்டும்,


இந்த கோாிக்கையை நமது சங்கம் தமிழக அரசிடம் தொடா்ந்து முறையிட்டு வருகிறது, மாண்புமிகு முதல்வா் அவா்களும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அவா்களும் இந்த பிரச்சனையில் அதிக அக்கரை காட்டி வருகின்றனா், எனவே கட்டாயம் இதற்கான ஆணையை நமக்கு வழங்குவாா்கள்,


எனவே நா்சாி பிரமாி பள்ளிகள் எதற்கும் அச்சப்படாமல் தங்கள் பள்ளிகளி்ல் இந்த ஆண்டே ஆறாம் வகுப்பை துவங்குங்கள். ஐந்தாம் வகுப்பு முடித்த ஆா்.டி.இ. மாணவா்களை ஆறாம் வகுப்பில் தொடா்ந்து  தக்கவையுங்கள், அரசின் சலுகைகளை தெடா்ந்து அவா்களுக்கு பெற்றுத்தருவோம்,


நமது அரசு நல்லரசு இதை நமக்கு செய்து தரும் என்று மனதார நம்புவாேம்


அப்படி முடியாத பட்சத்தில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி மாணவா்களுக்கு வழங்க வேண்டிய உாிமையை, வழங்க வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தேனும் நடுநிலைப் பள்ளிக்கான அனுமதி ஆணையை நமது சங்கம் பெற்றுத்தரும்,


இந்த விஷயத்தில் நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ..இ. பள்ளிகள் சங்கம் மட்டுமே முன் முயற்சி எடுத்து செயலாற்றி வருகின்றது, வேறு எந்த சங்கமும் இதற்காக துளி கூட பாடுபடவில்லை, இதில் நமக்கு வெற்றி என்பது நீங்கள் அளிக்கும் முழுமையான ஒத்துழைப்பை பெரறுத்தே உள்ளது, எனவே நல்ல சங்கத்தை நம்புங்கள்,


நாளைய வெற்றி நமதாக இருக்கட்டும்,


நம்பிக்கையுடன்


உங்கள்


கே,ஆா்,நந்தகுமாா், மாநில பொதுச்செயலாளா்,