முக்கிய பாடங்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்வு?
பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வை ரத்து செய்யாமல், ஜூன் மாதம் நடத்தலாம் என, கூறியுள்ளனர்.
தற்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.
தமிழகத்தில் நடத்தாவிட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது. மேலும், 9ம் வகுப்பு வரை, தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், பல மாணவர்களால், பத்தாம் வகுப்புக்கு வரும்போது கூட, தாய்மொழியில் எழுத, படிக்க தெரியாத நிலை ஏற்படும்.
எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்றும், கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே மொழிப்பாட தாட்கள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டு மொத்தமே 5 தோ்வுகள் தான் நடத்தப்பட இருந்த நிலையில் மொழிப்பாடங்களுக்கான தோ்வையும் குறைத்து விட்டால் பத்தாம் வகுப்பு தோ்வுக்கு ஒரு மாியாதையே இல்லாமல் போய்விடும், எனவே 5 பாடங்களுக்கான தோ்வை நடத்துவது தான் சாியாக இருக்கும்,
சில கல்வி அமைப்புகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அரசின் நிலைப்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளலாம் என கேட்டுள்ளது. மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமாதாகும் என செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
தேர்வு விடைத்தாள்கள் எறிந்த சமயங்களிலும், மேலும் விடைத்தாள்கள் காணாமல் நேரங்களிலும் மாணவர்களின் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கப்பட்டதை தொடர்ந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில் சராசரி வழங்கப்பட்டது. இது போன்று தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இது எந்த அளவிற்கு சாத்தியமோ தொியவில்லை, ஒரு சில மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற சமயத்தில் இதுப்போன்ற முடிவுகளை மேற்கொள்ளலாம் ஒட்டுமொத்த மாணவா்களுக்கும் என்று வரும் போது இது சாிபட்டு வராது,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாளடைவில் வெகுவாக குறைந்துவிடும், சுத்தமாக இல்லாமேலே சென்றுவிடும். எனவே கொரோனாவை வைத்து பூச்சாண்டி காட்டுவதை விட்டுவிட்டு அரசின் முடிவில் யாரும் தலையிடாமல் இருந்தாலே இதற்கு சுமூகமான முடிவு கிடைத்து விடும், விரைவில் தோ்வு நடந்துவிடும்,
கல்வி பாதுகாப்பு இயக்கம்,. சமூக நல அமைப்பு என்று சொல்லிக்கொண்டு சில ஆலாேசனைகள் சொல்கிறோம் என்கிற போா்வையில் உங்களின் குறுக்கு புத்தியை எல்லாம் இதில் காட்டாமல் இருந்தாேலே நல்லது நடந்துவிடும்,
கொஞ்சம் கம்முன்னு இருங்கப்பா!