மாநிலத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
நமது சங்கதின் மரியாதைக்குரிய மாநில தலைவர் பேராசிரியர் ஐயா ஏ.கனகராஜ் அவர்களுக்கு 76 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்நாடு B.Ed கல்லூரிகள் சங்க மாநிலத் தலைவர் ஜெயா பொறியியல் கல்லூரி சீனிவாசா பொறியியல் கல்லூரி ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஜெயா பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பி.எட் கல்லூரி Nursing college Pharmacy college Hotel Managementஜெயா கலை அறிவியல் கல்லூரிகள் ஜெயா விவசாய கல்லூரி ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஜெயா பப்ளிக் சிபிஎஸ்இ ஸ்கூல் பால்லோக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நடத்திவரும் நமது சங்கத்தின் மாநில தலைவர் மரியாதைக்குரிய பேராசிரியர்.A. கனகராஜ் அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்த நாள் விழா.....
ஐயா கணகராஜ் அவா்கள் எளிமையானவர் இனிமையானவர் நற்சிந்தனையாளர் அமைதியான பேச்சாளர் ஆற்றல் மிகு செயல் வீரர் உழைப்பால் உயர்ந்த உத்தமப் பெருந்தகை கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கும் பாரிவள்ளல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் கல்வியாளர்
கர்மவீரர் காமராசர் மண்ணிலே பிறந்து இன்று தமிழகம் மட்டுமல்ல ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சாதாரண பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தும் நடமாடும் பல்கலைக்கழகம் நமது அன்புத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் அவர்கள் கல்வியின் கலங்கரை விளக்கமாய் தமிழக தனியார் பள்ளிகளுக்கு வழிகாட்டியாய் நமது சங்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராய் வாழும் காமராஜர் ஐயா கனகராஜ் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம்
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க தொய்வில்லாமல் தொடர்க உங்கள் கல்விப்பணி என எந்நாளும் வாழ்த்தும்......
உங்கள்.
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.