பள்ளிப் பேருந்துகளில் கொரானஸ்

 பள்ளிப் பேருந்துகளில் கொரானஸ்



அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரணாவை விரட்டி அடிப்பதில் மிக முக்கிய பங்கு நமக்கும் இருக்கிறது ஏனென்றால் சின்னஞ் சிறு குழந்தைகளிலிருந்து 12ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் வரை நமது பள்ளிகளில் கல்வி பயில வருகிறார்கள் அவர்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை


தற்போது கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நமது பள்ளி வாகனங்கள் அனைத்தும் முறையாக தினம்தோறும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.மேலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை புகைப்படமாக எடுத்து நமது குரூப்பிலோ அல்லது RTO அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமோ அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


எனவே நமது வாகன ஓட்டுநர்களுக்கும் வாகன மேற்பார்வையாளர்களுக்கும் தகுந்த அறிவுரை வழங்கி தினந்தோறும் ஒரு நாள் கூட விடாமல் லைசால் கொண்டு சுத்தம் செய்து வாகனத்தை இயக்க அறிவுறுத்தவும் மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக எந்நேரமும் ஆர்டிஓ அவர்களும் மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களும் வாகனத்தை ஆய்வு செய்யவுள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்


மேலும், இது எப்படி பயன்படுத்துவது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 1 லிட்டர் லைசால் எடுத்துக்கொண்டு அதனுடன் 19 லிட்டர் தண்ணீர் கலந்து ஸ்பிரேயர் மூலமாக பள்ளி வாகனத்தின் உட்புறம் மாணவர்கள் எங்கெல்லாம் தொடக் கூடிய இடம் இருக்கின்றதோ அமரும் இருக்கை உட்பட அனைத்து இடங்களையும் இந்த கிருமிநாசினி லைசால் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் அதோடு வாகனத்தின் வெளிப்புறத்தையும் வாகன ஓட்டுனர்கள் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


எனவே பள்ளி நிர்வாகிகள் ஆகிய நாம் சிறந்த முறையில் நமது பள்ளி வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை எடுத்து அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இந்த அறிவிப்பு கிருட்டிணகிாி மாவட்டத்திற்கு ம்டடுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தான், உங்கள் பகுதி ஆா்.டி.ஓ, சொல்லும் வரை காத்திருக்க வேண்டாம், நமது குழந்தகளின் பாதுகாப்பு நமது கைகளில் தான் உள்ளது 


இப்படிக்கு,
 *P.S.கணேசன் ,
 தலைவர்* தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம்.