தனியார் பள்ளி வாகனங்களுக்கு  இன்ஷூரன்ஸ் மற்றும் வரிகளை  தள்ளுபடி செய்ய வேண்டும்

தனியார் பள்ளி வாகனங்களுக்கு  இன்ஷூரன்ஸ் மற்றும் வரிகளை  தள்ளுபடி செய்ய வேண்டும்.



தனியார் பள்ளி வாகனங்களின் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வருக்கு மாநில பொதுச்செயலாளர் எழுதியுள்ள கோரிக்கை மனு பத்திரிக்கையாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்...


..
அனுப்புதல்...


         கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி                       மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.
        எண்.6. ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை 75 செல்.. 9443964053.


பெறுதல் ...
        மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்


     தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை .9.



 வழி.... மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் சென்னை.9 .


பொருள்... தனியார் பள்ளி வாகனங்களின் இன்சூரன்ஸ் சாலை வரி இருக்கு வரியை                             மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து எப்.சி செய்ய 3மாத காலஅவகாசம் தர                             வேண்டி கோரிக்கை மனு....,.


ஐயா..., வணக்கம்.....


கொரோனாவின் கோரத்தாண்டவத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும்எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் உளமார பாராட்டுகின்றோம்.


தமிழக அரசு எடுத்து வரும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாங்கள் உடனிருந்து எக்காலமும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறோம்.பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து தமிழகத்தின் தலைசிறந்த கல்வி சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தந்து நாளும் உழைத்து வரும் தமிழக அரசை வணங்குகின்றோம். 


கல்வி சிறந்த தமிழ்நாட்டின் தரமான கல்விக்கு நாளும் உழைத்து வரும் தனியார் பள்ளிகளின் அளப்பரிய பங்கை யாரும் மறந்துவிட முடியாது. அரசு செய்யவேண்டியதை தனியார் பள்ளிகள் தலைமேல் சுமந்து மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.


அரசின் பெரும்பணச் சுமையையும்  பணிச்சுமையையும் குறைத்து தரமான கல்வியை எண்ணற்ற மாணவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகிகள் தந்து வருகிறார்கள். இச்சூழலில் கொரானா எனும் கொடிய நோய் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க விடப்பட்டுள்ள விடுமுறையின் காரணமாக எங்களால் தொடர்ந்து எங்கள் பள்ளிகளை நடத்த முடியாமல் பள்ளி வாகனங்களை இயக்க முடியாமல் தத்தளித்து வருகின்றோம்.


தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக தமிழக போக்குவரத்து துறையிடம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை  சுமார்
50,000.இந்த பள்ளி வாகனங்களில் காலையிலும் மாலையிலும் கல்வி கற்க மட்டுமே மாணவர்களை அழைத்துக் கொண்டு வர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு விழாக்களுக்கு மட்டும் இலவசமாக எங்கள் வாகனங்களை இயக்குகிறோம்.வேறு எந்த காரியங்களுக்கும் பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப் படுவதில்லை.


200 பள்ளி வேலை நாட்கள் மட்டுமே இயங்கும் இந்த வாகனங்களுக்கு 24 மணிநேரம் 365 நாட்களும் ஓடக்கூடிய ஆம்னி பஸ்களுக்கு கட்டும் இன்சூரன்ஸ் தொகையை கட்டி வருகின்றோம். அதுவும் ஆண்டுதோறும் IRDA  100 சதவீதம் உயர்த்திக் கொண்டே வருகிறார்கள். பள்ளி வாகனங்கள் 99% விபத்தில்லா பயணத்தை உறுதி செய்து இருக்கின்றோம். அரசு போடும் அத்தனை சிறப்பு விதிகளையும் நிறைவேற்றி வருகின்றோம்.


பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி  இருக்கை வரி  பசுமை வரி என பல்வேறு வரிகள் போட்டாலும் அத்தனை வரிகளை கட்டியும் புதிதாக போடப்பட்ட வேகக்கட்டுப்பாட்டு கருவி சிசிடிவி கேமரா ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தி இருந்தாலும் ஆர்டிஓக்கள் சொல்லும் கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.


வீடு தோறும் வாசல் தோறும் தெரு தோறும் பள்ளி வாகனங்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூட செல்லாத சாலைகளில் பட்டி தொட்டி எங்கும் திரிந்து மாணவர்களை அழைத்து வரக்கூடிய வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி...... குண்டும் குழியுமான சாலைகளில் ஒரு மாதம் கூட ஒழுங்காக வேலை செய்யாத சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.


திசையே காட்டாத கருவிக்கு பெயர்தான் திசைகாட்டும் கருவி என்பதுபோல் ஜிபிஆர்எஸ் கருவியை பொருத்த சொல்கிறார்கள் அதுவும் கிராமங்களில் நெட்வொர்க் கவரேஜ் இல்லை. ஜிபிஆர்எஸ் வேலை செய்வதில்லை இந்தியாவில் ஜிபிஆர்எஸ் வேலை செய்வதற்கான நேவிகேஷன் இல்லாத சூழலில் இனிமேல் கண்டுபிடித்தாக வேண்டிய காலகட்டத்தில் தான் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்த சொல்கிறார்கள். அதுவும் மூன்று மாதங்களுக்கு மேல் ஜீரோ சதவீதம் வேலை செய்யாது என்று தெரிந்தும் ஜிபிஆர்எஸ் பொருத்தசொல்லுவது எந்த வகையில் நியாயம்.
 
கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் மூன்று மாதங்கள் பள்ளி விடுமுறை மாணவர்களிடம் கல்வி கட்டணமும் வாங்கவில்லை. பள்ளி வாகன கட்டணமும் வாங்கவில்லை.பள்ளி வாகனங்களை ஓட்ட மாட்டோம். ஓடாத பள்ளி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் சாலை வரி இருக்கை வரியை கட்ட சொன்னாள் எப்படி கட்டுவது. அதுவும் மே மாதம் எப்.சி. செய்ய பெயிண்டிங் டிங்கரிங் ஆயில் சர்வீஸ் மெக்கானிக் சர்வீஸ் எல்லாம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி வண்டியை எடுத்துக் கொண்டு சென்றால் ஆர்.டி.ஓக்கள் பல்லாயிரக் கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பலமுறை இழுத்தடித்து இம்சை செய்து f.c. செய்ய மறுப்பார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. 


எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் அவர்கள் இந்த உண்மையை அறிந்து தனியார் பள்ளி வாகனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு உரிய இன்ஷூரன்ஸ் மற்றும் வரிகளை எல்லாம் தள்ளுபடி செய்து இன்னும் மூன்று மாதங்கள் கழித்து எப்.சி செய்ய ஆர்டிஓ இடம் தகுதிச்சான்று பெற விதிவிலக்கு வழங்கி உதவிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.


தங்கள் உண்மையுள்ள


கேஆர் நந்தகுமார்


மாநில பொதுச்செயலாளர்
28.03.2020.. சென்னை