கலங்காதீா்,,,,,,, கவலைகள் தீரும்,,,, பள்ளி நிா்வாகிகளுக்கு பொதுச் செயலாளா் வேண்டுகோள்,,,,,,,
அன்பிற்சிறந்த பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும்
இனிய வணக்கம் .
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
கொரோனா எனும் கொடிய வைரஸ் ஆட்கொல்லி நோய் இவ்வுலகை வாட்டி வதைத்துக் கொண்டு வரும் இவ்வேளையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமல்ல.....
ஜூன் முதல் தேதி வரை அது நீண்டு கொண்டே தான் போகும்.
இனி நமக்கெல்லாம் பள்ளி திறப்பு என்பது ஜூன் மாதம் தான்
பள்ளி கட்டண பாக்கி உள்ளது
இனி வசூல் செய்வது கடினம்
மார்ச் ஏப்ரல் மே மாதம் சம்பளம் தர வேண்டும்.
என்ன செய்யப்போகிறோம் என்று கலங்கி நிற்கும் கல்வியாளர்களை கலங்காதீர் தைரியமாக இருங்கள் தன்னம்பிக்கையோடு பணியாற்றுங்கள்
நமக்கெல்லாம் முதலில் உயிர் முக்கியம்
அதைவிட இந்த உலகம் முக்கியம்.
நாம் தனித்து நின்று எதுவும் செய்திட முடியாது. உலகத்தோடு ஒத்து போய்தான் எல்லாவற்றையும் வென்றாக வேண்டும்.
எனவே நீங்கள் கலங்காமல் உங்கள் வீட்டிலேயே உங்கள் குடும்பத்தாரோடு தனித்திருந்து நோயில்லாமல் நலமுடன் வாழ்வோம். நல்வழியை தேடுவோம்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துவிட்டது.
10 /11ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகூட தள்ளி வைத்தாகிவிட்டது.
12 வகுப்பு அரசு பொதுதேர்வு எழுதாத வர்களைகூட மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.
எனவே நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம்.
பாக்கி உள்ள கல்விக்கட்டணம் ஜூன் மாதம் வசூலித்துக் கொள்வோம் கல்வி கட்டண பாக்கி வைத்துள்ள பெற்றோர்கள் டிசி வாங்காமலேயே வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள். நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் பாக்கியை வசூலிக்க முடியாது என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்க கூடிய நடுத்தர பள்ளிகள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறோம் அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு ஏதேனும் நிவாரணம் அல்லது ஆசிரியர்களுக்கான ஒரு மாத ஊதியம் வழங்கவும் உடனடியாக ஆர்.டி.இ. கல்விக்கட்டண பாக்கியை உங்களுக்கு உடனே கிடைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
நீங்கள் யாருக்கும் பயந்து லட்சக்கணக்கில் சொத்து வரியை கட்டாதீர்கள்.
உங் களை யாரும் எதுவும் செய்திட முடியாது ஜூன் மாதம் வரை எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஐடி ரிட்டர்ன் ஜி.எஸ்.டி .கூட குறைத்திருக்கிறார்கள்.
எனவே யாரும் எதற்கும் கலங்காமல் முதலில் நீங்கள் உங்களை உங்கள் குடும்பத்தை கவனமாக பார்த்து இன்னும் இருபது நாட்கள் வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியோடு இருங்கள்
பாதுகாப்போடு இருங்கள்
என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் நன்றாக இருந்தால் தான் நீங்கள் செய்யும் தொழில் நன்றாக வரும். நீங்களே கலங்கிப்போய் மனதைரியம் இழந்து வெளியில் திரும்ப ஆரம்பித்தால் அது உங்களை மட்டுமல்ல இந்த சமுதாயத்தையும் சேர்த்து பாதிக்கும்
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உதாரண புருஷனாக இருக்க வேண்டும்.
நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும் என்று உளமார வாழ்த்தி
உங்கள் எல்லோர் வாழ்விலும் வளமும் நலமும் பலமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
என்றும் உங்கள் நலம் நாடும்.
உங்கள்.
கே.ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.