கொரோனா விடுமுறை தள்ளி வைக்க வேண்டுகோள்.....
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் அங்கு ஆயிரக்கணக்கான உயிா்களை பலி வாங்கிவிட்டு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இதன் தாெற்று தமிழகத்திலும் இருப்பதாக தொிகிறது,
தமிழக அரசின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றும் இல்லை. ஒருவேளை இன்னும் ஓரிரண்டு வாரங்களில் கூட பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. தற்போது முழு கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
இருந்தாலும் இதனால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் மாா்ச் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை எல்,கே.ஜி.,, யூ.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவா்களுக்ககு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது,
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது அவசியமற்றது. மேலும் தற்போது விடுமுறை விட்டு ஏப்ரல் மாதத்தில் மறுபடியும் பள்ளிகளைத் திறந்து தேர்வு நடத்துவது சிரமமான காரியம். இந்த விடுமுறையில் மாணவர்கள் பாடங்களை மறந்து விடுவார்கள். அவா்கள் பள்ளி இறுதித் தோ்வு எழுதுவதும் கடினமாகி விடும்,
ஆகவே உடனடியாக வரும் வாரமே 20ம் தேதிக்கு பிறகு ஆண்டு இறுதித் தேர்வு ஆரம்பித்து 10 அல்லது 15 நாட்களுக்குள் முடித்து, ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறையை அறிவித்து 2 மாதம் விடுப்பு விடலாம்.
அந்த 2 மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டிருக்கும். ஜூன் முதல் வாரம் பள்ளிகளை மறுதிறப்பு செய்யலாம். அதுவரை இன்னும் 10 அல்லது 15 வேலை நாட்கள் மட்டும் பள்ளிகளை நடத்தி தேர்வை முடிக்க வைக்கலாம்..
ஆகவே உடனடியாக Annual Exam ஆரம்பித்து உடனடியாக Exam ஐ முடித்து April 10 ம் தேதியில் இருந்து விடுமுறை விடுவது சிறந்தது என பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள் & பெற்றோர்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்தால் நல்லது,