விரைவில் எட்டாம் வகுப்பு வரை அனுமதி

விரைவில் எட்டாம் வகுப்பு வரை அனுமதி



நா்சாி பிரைமாி பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்துவது பற்றிய அறிவிப்பு கட்டாயம் இன்னும் ஒருசில வாரங்களில் வெளிவரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, ,  நமது சங்கம் இதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறது,


தமிழக முதல்வா் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சாிடம் தொடா்நது நாம் வைத்த கோாிக்கையின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அந்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவந்துவிடும். கல்வி மானிய கோரிக்கை மற்றும் கொரானா விடுமுறை போன்ற காரணங்களால் தாமதமாகிறது என தகவல். 


இலவச கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் நா்சாி பிரைமாி பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்துவது   100% கண்டிப்பாக உண்டு. இதற்காக புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது, அதன் படி 10 வகுப்பறைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.


விரைவில் இந்த ஆணையை பெருவதற்காக நமது சங்கம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது, ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாக இந்த ஆணையை வழங்கினால் தான் அடுத்த கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு துவங்க முடியும், அப்படி துவங்கினல் தான் இந்த ஆண்டு ஆா,டி,இ,யில் ஐந்தாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு ஆறாம் வகுப்பு சோ்க்கை அளிக்க முடியும், இல்லையேல் அவா்களது கல்வி உாிமை பாதிக்கப்படும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்,


எனவே நா்சாி பிரைமாி பள்ளி தாளாளா்கள் தங்கள் பள்ளிகளை தரம் உயா்த்த தயாராக இருங்கள் அரசாணை எப்போது வேண்டுமானாலும் வரலாம், நம்பிக்கைேயாடு காத்திருங்கள்,


கே,ஆா், நந்தகுமாா், மாநில பொதுச்செயலாளா்,