தனி இயக்குனரகம் தொடங்கிய தமிழக அரசுக்கு நன்றி........
தனியார் பள்ளிகளுக்காகவே தனி இயக்குனரகம் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில்அறிவித்து அதை சட்டமாக்கிய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பில்மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே ஆர் நந்தகுமார் அவர்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்த போது எடுத்த படம்.நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை பெறுவதற்கும் உரிய ஆணையை உடனே அமல்படுத்த அரசானைகளும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளதற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.