அறிக்கை விடுவதற்கு முன் எங்கள் பிரச்சனைகளையும் எண்ணிப்பாருங்கள்.......

அறிக்கை விடுவதற்கு முன் எங்கள் பிரச்சனைகளையும் எண்ணிப்பாருங்கள்......


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டிற்கான கல்விக்கட்டணம் கேட்கக்கூடாது என்றும் கல்வி கட்டணம் வசூலிக்க கூடிய பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கடுமையான அறிக்கையை வெளியிட்டிருந்தார். 


அதற்கு நமதுதமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கேஆர் நந்தகுமார் அவர்கள் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு... தமிழகம் முழுக்க அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பள்ளி நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் தங்கள் வேதனைகளையும் பிரச்சனைகளையும் தெளிவு படுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறிவிட்டு பள்ளி நிர்வாகிகள் சொன்ன பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி ஒன்றிரண்டை மட்டும் மீண்டும் உங்கள் கவனத்திற்கும்  பரிசீலனைக்கும் பகிர்ந்துள்ளேன்.
.
தனியார் பள்ளிகள் எல்லாம் தீண்டத்தகாத வைப்போல் அறிக்கை விட்டுள்ளார்...,., 


மரியாதைக்குரிய மருத்துவர் அய்யா அவர்களே தங்கள் அன்பு மகன் மருத்துவர் சின்னய்யாஅன்புமணி ராமதாஸ் அவர்கள் தனியார் பள்ளியில் படித்துதான் மருத்துவர் ஆனார்... மக்களவை உறுப்பினராகி..... இந்தியப் பேரரசின் சுகாதாரத்துறை அமைச்சராகி... இன்றைக்கும் மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிய ஆளுமைமிக்க தலைவரக வலம் வருகிறார். 


அவரது அன்பு குழந்தைகள் அதாவது தங்கள் பேரக் குழந்தைகள் கூட தனியார் பள்ளிகளில் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்கிற நல்ல செய்தியையும் தாங்கள் அறியாததல்ல.


தனியார் பள்ளிகள் செய்திடும் செலவுகளை எல்லாம் உங்களுக்கு பட்டியலிட்டும் அதில் ஒன்றை மறந்து விட்டோம் உங்களைப்போன்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நாங்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நன்கொடையாக அள்ளித் தருகிறோம். அதை யார் கணக்கில் சேர்ப்பது.


அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி 25 சதவீத ஏழை மாணவர்கள்
 7 லட்சம் பேரை சேர்த்து கல்வி கற்பித்த வகையில் மத்திய மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி இரண்டு ஆண்டுகளாக ரூபாய் ஆயிரம் கோடி நிலுவையில் இருப்பது தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். 


இரண்டு ஆண்டுகளாக அரசாங்கமே  போட்டுள்ள சட்டப்படி எங்களுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை எங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்களா.?
தனியார் பள்ளிகளுக்கு இதுவரை எந்த உதவியும்   செய்யாத நீங்கள் எந்த அடிப்படையில் எங்களை கேள்வி கேட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வைத்து தனியார் பள்ளிகளை நசுக்கப் பார்ப்பது நியாயமா எண்ணிப் பாருங்கள்.......


அறிக்கை விடுவதற்கு முன் எங்கள் பிரச்சனைகளையும் எண்ணிப்பாருங்கள்,,,,,,