பா,ம,க, ராமதாசின் அறிக்கைக்கு பொதுச்செயலாளாின் விளக்கம்
மரியாதைக்குரிய பா.ம.க. நிறுவனர்
ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு......
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தங்கள் அறிக்கைக்கு எங்கள் விளக்கத்தினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
அய்யா.....
வணக்கங்கள் ஆயிரம் ,,,,,,,
தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து ஒரு பைசா கூட நிதிஉதவி பெறாமல் ஒரு கோடிக்கும் மேலான மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி தந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டஆசிரியர் அல்லாதோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து ஒரு லட்சம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் வேலைவாய்ப்பை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் கொடுத்து இ. எஸ். ஐ. பி.எஃப் கட்டி சொத்துவரி கட்டிட வரி நிலவரி நீர்வரி மின்சார கட்டணம் தொழில் வரி சேவை வரி ஜிஎஸ்டி வருமான வரி என்று வருடம்தோறும் பல்வேறு வரிகளை லட்சக்கணக்கில் கட்டி மத்திய மாநில அரசுகளின் கருவூலத்தை நிரப்பி வருகின்றோம்.
நாங்கள் ஒவ்வொருவரும் நேர்மையாக சம்பாதித்த பணத்தில் உண்மையான சமூகப் பணியாற்றி அதன் மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் தந்துஅரசுக்கு பெரும் பணச் சுமையையும் பணிச் சுமையையும் குறைத்து தமிழகத்தை தலைநிமிரச் செய்ததில் தனியார் பள்ளிகளின் பங்கு அளப்பரியது.
எங்கள் பள்ளிகளில் படித்தோர் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் உயர்ந்து ஒளிவீசி அவர்கள் குடும்பத்தை மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்தை தலைநிமிர செய்து வருகிறார்கள் என்பது தங்களைப் போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரியாததல்ல.
ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னாள் இன்னால் அமைச்சர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் செல்வந்தர்கள் மட்டுமல்ல சாதாரண குடிமக்கள் கூட குறிப்பாக படித்த பட்டதாரிகள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றாற்போல் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்கள்.
அரசு பொதுத்தேர்வுகளில் மட்டுமல்ல....மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் 100% முதன்மை பெற்று வருகிறார்கள். மத்தியமாநில அரசுகள் செய்ய வேண்டிய காரியத்தை தனியார் பள்ளிகள் செய்து வருகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த எத்தனையோ எம் தோழர்கள் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள் என்கிற நல்ல செய்தி தங்களுக்குத் தெரியாதது அல்ல.
ஏன் தாங்களே தர்மபுரியில் ராமதாஸ் மேல்நிலைப் பள்ளியைமட்டுமல்ல அன்னை சரஸ்வதி பல்கலைக்கழகத்தை திண்டிவனத்தில் நடத்தி வருகிறீர்கள் உங்கள் பள்ளிக்கும் எதிரில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இருக்கக்கூடிய வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் யார் தருவார்கள் மின்கட்டணம் யார் கட்டுவார்கள் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு பள்ளி வாகனத்திற்கான வரிகளை யார் கட்டுவார்கள் டீசல் யார் போடுவார்கள் பராமரிப்பை யார் செய்வார்கள் ஒன்று இரண்டு அல்ல ஐம்பதாயிரம் பேருந்துகள் . தமிழக போக்குவரத்துத் துறையின் கருவூலம் கோடிக்கணக்கான ரூபாய்களில் மிதக்கிறது என்றால் அது தனியார் பள்ளிகள் கட்டக்கூடிய வரி தொகையிலும் இன்சுரன்ஸ் தொகையிலும் என்பது தாங்கள் அறியாததல்ல.
கோடிக்கணக்கான மாணவர்களுக்கு நல்ல கல்வி தருவது என்றால் அரசுக்கு எவ்வளவு செலவாகும் ..அரசுப் பள்ளிகள் சரியாக செய்து விட்டால் தனியார் பள்ளிகளுக்கு என்னவேலை. இன்றைக்கு சாதாரண குப்பனும் சுப்பனும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் ஏன் எங்கள் வயிற்றில் அடிக்கிறீர்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.
அடுத்த ஆண்டிற்கானகல்விக் கட்டணம் கேட்ட பள்ளிகள் யார் அவர்கள் பெயரை வெளியிடுங்கள் . அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதில் மாற்று கருத்து கிடையாது அப்படிப்பட்ட பள்ளிகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் அறிக்கை அவர்களுக்கு பாதிப்பு இருக்காது
எங்களைப் போன்ற சாதாரண நடுத்தர பள்ளிகளுக்கு தான். 90% பள்ளிகள் நஷ்டத்திலும கஷ்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வட்டி கூட கட்ட முடியவில்லை. .
விட்டால் பல பள்ளி நிர்வாகிகள் தற்கொலை செய்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டு மதுரையில் ஒரு பள்ளி நிர்வாகி குடும்பத்தோடு ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகின்றோம். வேறொன்றுமில்லை கடன்தொல்லை.
இன்றைக்கு 90 சதவீத பள்ளிகளில் 50 சதவீத பெற்றோர்கள் நடந்து முடிந்த ஆண்டுக்கான
கல்வி கட்டணம் செலுத்தவில்லை. தேர்வு வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்தோம். தேர்வே இல்லை என்றாகிவிட்டது.
நாங்களும் தமிழர்கள் தானே மனிதர்கள்தானே எங்களுக்கு மனசாட்சி இருக்கிறதல்லவா. தலைவா.. தவபுதல்வா கொரானா ஆட்கொல்லி நோய் எங்களை கொன்றதோ இல்லையோ உங்கள் அறிக்கை எங்களை கொன்றே விட்டது.
நல்ல காலத்திலேயே பெற்றோர்கள் கல்விக்கட்டணம்கட்ட மாட்டார்கள். என்ன
உங்கள் அறிக்கை ஒன்றே போதும் அவர்கள் எங்களை ஏமாற்றிட அல்லது தப்பித்துக்கொள்ள...
நாளை விடிந்தால் நாங்கள் எங்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவேண்டும் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் உங்கள் அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறது என்பதற்காய் நாங்கள் எல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டதற்காக நீங்கள் எங்களுக்கு தந்துள்ள பரிசு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் வேண்டுகோளை ஏற்று எங்கள் அமைச்சர் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
மார்ச் ஏப்ரல் மே மூன்று மாதங்கள் எங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு யார் சம்பளம் தருவது.
உங்கள் அறிக்கை பெரிய பள்ளிகளை பெரிய முதலைகளை ஒன்றும் செய்யாது. எங்களைப் போன்ற சிறிய நடுத்தர பள்ளிகளை தான் பாதிக்கும் .
உங்கள் அறிக்கையை வைத்துக் கொண்டு எத்தனை பேர் வீரவசனம் பேசுவார்கள் என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
மரியாதைக்குரிய டாக்டர் ஐயா அவர்களே உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தனியார் பள்ளிகளை தயவுசெய்து நசுக்க பார்க்காதீர்கள் நாங்கள் அரசுக்கும் பள்ளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பலமாய் இருந்து அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வதில் அரும்பாடுபட்டு வருகின்றோம்.
அருள்கூர்ந்து எங்கள் நிலையை புரிந்துகொண்டு அறிக்கை விடுங்கள் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். நன்றியோடு.......
கே .ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.