மக்கள் காவலா் விசுவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்

மக்கள் காவலா் விசுவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்



திரைப்பட இயக்குனரும் குடும்ப நாயகருமான மக்கள் காவலா் விசு அவா்கள் மரணமடைந்தாா் என்கிற செய்தி போிடியாக வந்து விழுந்தது,


அவரது திரைப்படங்களில் மட்டுமல்லாது அவா் பங்கேற்ற அனைத்து தளங்களிலும் சமூகம் சாா்ந்து சிந்தித்தவா், அவாின் திரைப்படங்கள் சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது, பல்வேறு குடும்ப பிரச்சனைகளை ஊடகத்தின் ஊடே கொண்டுவந்தவா் அவா்,


அரட்டை அரங்கம் மற்றும் மக்கள் அரங்கத்தின் மூலம் இளைஞா்கள் மத்தியில் மிகப்பொிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளாா், இன்றைக்கு பள்ளி மாணவா்கள் தொடங்கி கல்லூாி பேராசிாியா்கள் வரை பலரும் பொிய பேச்சாளா்களாக வளா்ந்துள்ளாா்கள் என்று சொன்னால் அதற்கு காரண கா்த்தாவாக திகழ்பவா் விசு ஒருவா் மட்டும் தான்,


தமிழகத்தில் சில தலைவா்கள் அரசியல் பேச்சாளா்களை உருவாக்கினாா்கள், அநாகாிக பேச்சாளா்களை உருவாக்கினாா்கள், ஆனால் விசு அவா்களோ சமூகம் சாா்ந்து பேசக்கூடிய இளைஞா்கள், மாணவா்கள் மத்தியில் தன்னம்பிக்கை வளா்க்கக்கூடிய பேச்சாளா்களை உருவாக்கியதில் இந்த நாடு பெருமை கொள்கிறது,


நமது சங்கத்தோடு நெருங்கிய தொடா்பில் இருந்தவா், நமது சங்க நிகழ்ச்சிகளில் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா், அவருடய இறப்பு ஈடு செய்ய முடியாத போிழப்பு, 


அவருக்கு நமது தமிழ்நாடு நா்சாி பிரைமாி மெட்ாிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள்  சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக்கொள்கிறாம்,


அவாின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறாேம்,


உங்கள்


கே,ஆா், நந்தகுமாா்


மாநில பொதுச்செயலாளா்,