அரசின் உத்தரவை மதிக்க வேண்டும். ஈரோடு கூட்டத்தில் பொதுச்செயலாளா் பேச்சு...

அரசின் உத்தரவை மதிக்க வேண்டும். ஈரோடு கூட்டத்தில் பொதுச்செயலாளா் பேச்சு...



ஈரோடு வெள்ளாளர் கல்வி நிறுவனத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் நடைபெற்ற பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர். கே .ஆர். நந்தகுமார் சிறப்புரையாற்றினாா்,


வெள்ளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகர் நமது சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மாவட்ட செயலாளர் ஜனகரத்தினம்தாமரை ராஜா கொங்கு கொற்றவேல் விவேகானந்தா சென்னியப்பன் பெருந்துறை கொங்கு பள்ளி நிர்வாகி வாசவி கல்வி நிறுவனங்களின்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டு தனியார் பள்ளி நிர்வாகிகளின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசினாா்கள்.


அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் தனியார் நிறுவனங்கள் சொத்து வரி கட்ட வேண்டும் என்பதற்கு எதிராக ஊராட்சி நகராட்சி மாநகராட்சி அதிகாரிகளின் அத்து மீறல்கள் சம்பந்தமாக விளக்கப்பட்டது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சொத்து வரியை தமிழகத்தில் மட்டும் அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது அதற்காக நமது சங்கம் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது அதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. நமது சங்க உறுப்பினர்கள் தேர்ந்தவர்களுக்கும் சேர்ப்பவர்களுக்கும் மட்டும் இந்த ஆணையை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.


நர்சரி பிரைமாி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த வேண்டும்.  ஓராண்டு அங்கீகாரத்தை மூன்றாண்டுகளாக தரவேண்டும் என்றும் நிலுவையில் உள்ள இரண்டு ஆண்டுகளுக்கான ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை  உடனே தரவேண்டும். 


கொரானா வைரஸ் நோய் பரவாமல் இருக்க விட்டுள்ள விடுமுறை முடித்து அனைத்து பள்ளிகளும் உடனடியாக திறக்கப்பட வேண்டும், பாக்கியுள்ள கல்வி கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும். பாக்கி வைத்து விட்டு சொல்லாமல் வேறு பள்ளிகளுக்கு சென்றால் அந்த மாணவர்களை வேறு எந்த பள்ளியில் சேர்க்க கூடாது. டிசி இல்லாமலும் நோ டி யூ கல்வி கட்டண பாக்கி சர்டிபிகேட் இல்லாமலும் எந்த மாணவனையும் எந்த பள்ளியிலும் சேர்க்கக்கூடாது



ஒரு பள்ளியை ஏமாற்றிவிட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் வரும் மாணவனை உங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டால் உங்களை ஏமாற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் சொல்லாமல் வேறு பள்ளிக்கு போய்விடுவார்கள். பள்ளி நிர்வாகிகள் ஜாக்கிரதையாக இருக்கவும்


அட்மிஷன் வந்தால் போதும் என்று அற்பமான வேலைகளை செய்ய வேண்டாம்.சில பெரிய பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் றடத்த வேண்டாம் என்று சொன்னாலும் மத்திய மாநில அரசு உத்தரவை மதிக்காமல் சிறப்பு வகுப்புகள் நடத்தி இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் வழக்குகள் போடப்பட்டு மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் பல பள்ளி நிர்வாகிகள் கைது செய்யும் அளவுக்கு போய் இருக்கிறார்கள்


எனவே அரசு விடுமுறை அறிவித்தால் நீங்கள் விடுமுறை விடுவது ஒன்றுதான் சரியான வழியாக இருக்கும் கடைசி நேரத்தில் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்போடு வேண்டுகின்றோம். இந்த ஓரிரு நாளில் பாடம் நடத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.


வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாளை முதல் எந்த வாகனமும் பொது போக்குவரத்தும் இருக்காது அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டிருக்கிறது. எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்கள்என்றால் நோயின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வே நாம் இதை பார்க்க வேண்டும்அதுவும் 60 வயதுக்கு மேலானவர்கள் எந்த காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம்.


எட்டு ஆண்டுகளுக்கு முன்னுள்ள வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் எட்டு ஆண்டுகளுக்கு பின் உள்ள வாகனங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை செய்தால் போதும் அவசரப்பட்டு வண்டிக்கு 20 ஆயிரம் செலவு செய்து ஆண்டுதோறும் f.c. செய்ய வேண்டாம் அரசாணை வேண்டுமானால் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்


எங்கள் நோக்கம் எல்லாம் தனியார் பள்ளிகளை பாதுகாப்பது மட்டும்தான்.அரசு பள்ளியில் படித்தால் அதுவும் தமிழ் வழியில் படித்தால் மட்டும் தான் அரசு வேலை என்று போட்டுள்ள சட்டம் சரியாகாது படித்தவர்கள் அனைவருக்கும் திறமை உள்ளவர்கள் அனைவருக்கும் வேலை வழங்குவது தான் நல்ல அரசுக்கு அழகாகும் என்று அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.அரசு பள்ளியில் படிப்பவர்களை ஊக்குவிக்கிறோம் எனச் சொல்லி தனியார் பள்ளிகளை மட்டம் தட்டும் இந்த காரியத்தை கைவிட வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் வழங்கி பேசினார் .